தமிழர்களுக்கும் கிடைக்க வேண்டிய அதிகாரங்களை பகிர்ந்தளித்திருந்தால் இலங்கையில் இரத்த ஆறு ஓடியதை தடுத்திருக்க முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூச்சுத்திணறல் காரணமாக அதிகாலை 3 மணிக்கு  மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணைக்காக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தன்னை விடுவிக்குமாறு கோரி முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் உச்சநீதிமன்றத்தில் அடிப்டை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 24 வயதான இரட்டை சகோதரர்கள் ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவரது மகன்கள் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனார்கள்.இராணுவத்தை நம்பி வட்டுவாஹல் பாலத்தில் வைத்து பிள்ளைகளை ஒப்படைத்தோம்

இஸ்ரேல்-காசா பகுதியில் தொடரும் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டு வர சண்டை நிறுத்தம் செய்யுமாறு இரு தரப்புக்கும் அமெரிக்கா அழைப்பு விடுத்திருந்த நிலையில், அங்கு மீண்டும் ராக்கெட் தாக்குதல்கள் தீவிரமாகியிருக்கின்றன.

இலங்கையின் பொலிஸ் மா அதிபர் ஒரு படுகொலைக்கு அனுமதி வழங்கியுள்ளதாக, பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற இறுதி கட்ட போரின்போது முள்ளிவாய்க்காலில் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையின் 12ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

தொற்றுநோய்க்கு எதிரான சட்டங்களை மீறுபவர்களை கைது செய்யும் போது அனைவரையும் சமமாக நடத்த வேண்டுமென இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கை பொலிஸ்மா அதிபரிடம் கோரியுள்ளது.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசாங்கம் இன்னமும் சரியான முறையில் அவதானம் செலுத்தவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாக திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சுமத்தியுத்துள்ளார்.

ஷிவானி நாராயணன் 19 வயதில் ஒருவர் இவ்வளவு பிரபலம் ஆக முடியுமா என மற்ற நடிகைகள் பொறாமைப்படும் அளவிற்கு சீரியலில் வலம் வந்தவர். சினிமா ஹீரோயின்களுக்கு நிகராக இவருக்கு ரசிகர் வட்டம் உள்ளது. முதன்முதலில் பகல் நிலவு சீரியல் வாயிலாக பிரபலமானார். அதன் பின்பு விஜய் டிவியின் பிரபல சீரியலான சரவணன் மீனாட்சி சீசன் 3 , கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா அனைத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார்.

மியன்மார் நாட்டில் கடந்த பெப்ரவரி மாதம் முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. ராணுவ ஆட்சிக்கு எதிராக மியன்மாரில் மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் மீது மியன்மாரில் ராணுவத்தினர் கடுமையான ஒடுக்குமுறைகளை பின்பற்றி வருகின்றனர். மியன்மாரில் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை பொதுமக்கள் 790 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளுடன் முள்ளிவாய்க்கால் மண்ணில் நினைவேந்தல் மேற்கொள்ள அனுமதி கேட்டு முன்னணி சட்டத்தரணிகள் நீதிமன்றில் தடைக்கெதிராக வாதாடிய நிலையில் அஞ்சலி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கண்டி, போகம்பறை சிறைக் கைதிகள் சிலர் கூரை மீதேறி போராட்டம் நடாத்தி வருகின்றனர்.உடனடியாக தங்களுக்கு PCR மேற்கொள்ளுமாறும், சந்தேகநபர்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு பிணை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்து, இவ்வாறு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

​லக்சல மற்றும் சலுசல ஆகிய நிறுவனங்களின் தலைவரான பிரதீப் குணவர்தன, கொரோனா தொற்றால் நேற்று (16) இரவு உயிரிழந்துள்ளார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி