தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று ஒரே நாளில் 232 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்தை நெருங்குகிறது.

கொவிட் கட்டுப்படுத்தல் திட்டத்தை முறைப்படுத்துவதற்காக சுகாதார மேலதிகாரிகளின் கவனத்தை பெறும் நோக்கில் பதுளை மாவட்ட பொது சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் இன்று (10) சுகயீன விடுமுறை நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

2021 மே 09 ஞாயிற்றுக்கிழமை,கொரோனா தொற்றுநோய் நாடு முழுவதும் பரவி வருகிறது, மக்களை ஒவ்வொருவராக கொன்று எண்ணிக்கையை அதிகரிக்கின்றது

கொரோனா வகைகள் குறித்து ஆராய்ச்சி நடத்தும் பேராசிரியர் சந்திம ஜீவந்தர, பேராசிரியர் நீலிகா மலவிகே ஆகியோர் நாட்டில் பரவலாக காணப்படும் ஆறு வகையான கொரோனா வைரஸ்களை அடையாளம் கண்டுள்ளதாக ஸ்ரீ ஜெயவர்தனபுர ஆராய்ச்சி குழு தெரிவித்துள்ளது.

கொரோனாவின் இரண்டாம் அலையால் இந்தியா தடுமாறிக் கொண்டிருக்கும் நிலையில், அதன் அண்டை நாடுகளிலும் தொற்று அதிகரித்திருப்பது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவுவல் அடுத்த செப்டம்பர் மாதம் வரையில் இதே முறையில் தொடர்ந்தால் 20,000 க்கும் மேற்பட்ட கொரோனா மரணங்கள் ஏற்படும் என மதிப்பிட்டுள்ளதாக (The Institute for Health Metrics and Evaluation (IHME) – the University of Washington) எனும் அமெரிக்காவின் வொஷிங்டன் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

நிர்வாக மற்றும் அரசியல் காரணங்களுக்காக நீதிமன்றங்களிடமோ அல்லது சட்டமா அதிபரிடமோ கலந்தாலோசிக்காமல் ரிஷாத் பதியுதீனை அரசாங்கம் தடுத்து வைத்திருப்பதாக வழக்கறிஞர் ருஷ்டி ஹபீப் குற்றம் சாட்டியுள்ளார்.

புவியை அச்சுறுத்திவந்த சீன ரொக்கெட்டின் உடைந்த பாகம், புவியை நோக்கி வந்தபோது இந்தியப் பெருங்கடலுக்கு மேலே சிதறிவிட்டதாக சீனா கூறுகிறது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில் அதிகளவானவர்கள் இந்தியர்கள் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

பாம் ஒயில் இறக்குமதி செய்வதைத் தடைசெய்யும் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு,அதாவது, மே 6, 2021 அன்று, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு பணிப்பாளர் தமயந்தி எஸ். கருணாரத்ன கையெழுத்திட்ட மற்றொரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சரியான திட்டமிடல் இல்லாததால் கொரோனா தடுப்பூசி வழங்கும் செயல்முறை பாரிய நெருக்கடியில் இருப்பதாக சுகாதார வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் அஜித் வத்துஹேவா,  இன்று காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO) தயாரித்துள்ள கொரோனா வைரஸ் மருந்து ஒன்றை அவசரகால தேவைக்கு பயன்படுத்த இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர் (டிசிஜிஐ) அலுவலகம் ஒப்புதல் அளித்துள்ளது.

உலக குடிபெயரும் பறவைகள் தினம் (world migratory birds day) வருடா வருடம் மே மாதம் 08 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது. உலகில் வருடம் தோறும் பறவைகளின் குடிபெயர்தல்கள் இடம்பெறுகின்றன. தாம் வாழும் பிரதேசங்களில் எதிர்கொள்ளும் வாழிடச் சிக்கல், கடும் வெப்பம், கடும் குளிர், உணவுப் பற்றாக்குறை என்பவற்றை தவிர்த்துக் கொள்ளவென அவ்வாழிடங்களில் இருந்து, வாழக் கூடிய சூழல் நிறைந்த பிரதேசங்களுக்கு பறவைகள் இடம்பெயர்கின்றன.

இலங்கைக்கு வருகை தந்து காலி ஜிந்தோட்டையில் உள்ள முன்னணி சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியுள்ள இரண்டு இந்திய பெண்கள் மற்றும் அவர்களது மூன்று மகள்களும் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக காலி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி