இலங்கை கடற்படை, ஐக்கிய அமெரிக்காவின் கடற்படை மற்றும் ஜப்பானின் கடற்பாதுகாப்பு தன்னார்வ படையணி ஆகியன இணைந்து நடத்தும் கடற்பயிற்சி, திருகோணமலை கடற்படைத் தளத்தில் இன்று ஆரம்பமானது.

துமிந்த சில்வாவை விடுவிக்க ஜனாதிபதி எடுத்த முடிவு நீதித்துறையை அவமானப்படுத்தும் செயலாகும் எனவும் இந்த நாட்டை சட்டவிரோத நாடாக உலகம் கண்டுகொள்ளும் காலம் உறுதி செய்யப்பட்டுவிட்டதாகவும் சமகி ஜன பலவேகய ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஸ்ரீபெரும்புதூரில் தேசிய நெடுஞ்சாலைத் துறையை ஏமாற்றி போலி பட்டா மூலம் 200 கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரம், விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த முறைகேட்டில் தொடர்புள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள முக்கிய நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறையின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன?

ஒரு வருட காலத்திற்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டு தற்போது தடுப்புக் காவலில் உள்ள கவிஞர் அஹ்னாப் ஜசீமை அவரது உறவினர்களும், சட்டத்தரணிகளும் சந்திக்க அனுமதிப்பது உள்ளிட்ட ஏனைய தடுப்புக் காவல் கைதிகளுக்கு வழங்கப்படும் சகல வசதிகளையும் வழங்குமாறு கடந்த 22ம் திகதி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவிற்கு சென்றிருந்த பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் பிரதானி பசில் ராஜபக்ஸ இன்று (24)  காலை நாடு திரும்பியுள்ளார்.

தெஹிவளை, நதிமால களஞ்சியமொன்றில் வைக்கப்பட்டிருந்த காலாவதியான மருந்துகள் சந்தைக்கு விநியோகிக்க வைக்கப்பட்டிருந்தனவா என்பது குறித்து விசாரணை செய்த பின்னர் அவற்றை அகற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படவிருப்பதாக தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை குறிப்பிடுகிறது.

மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். துமிந்த சில்வா இன்று (24) ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டார். இன்று கொண்டாடப்படும் பொசன் போயா தினத்தில் இடம்பெற்றுள்ளது சிறைச்சாலைத் துறை வட்டாரங்களின்படி, 93 கைதிகளுக்கு ஜனாதிபதியால் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

கொவிட் -19 தொற்றினால் பெருந்தோட்ட மக்கள் பல நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். அப்பகுதிகளில் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் மற்றும் 5, 000 ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்கும் வேலைத் திட்டம் என்பன முறையாக முன்னெடுக்கப்படுவதில்லை.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள . சமகி ஜன பலவேகய கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோரின் அடிப்படை உரிமை மீறல்தொடர்பான மனுக்களை விசாரிப்பதில் உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.டி. நவாஸ் இன்று (23) விலகுவதாக நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு குறைந்து விட்டதால் இனி முகக்கவசம் அணிய தேவையில்லை என இத்தாலி அரசு தெரிவித்துள்ளது.உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கால் பலருக்கு வேலையிழப்பு, தொழில் பாதிப்பு ஏற்பட்டு அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கொரோனா பரவல் காரணமாக சுப நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்ட நிலையில் புகைப்படக் கலைஞர்களுக்கு வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது.

மெக்சிகோ எல்லை துப்பாக்கிச் சூட்டில் 19 பேர் உயிரிழந்ததை அடுத்து ‘முழுமையான விசாரணைக்கு’ மெக்சிகோ ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.மெக்சிகோவின் ரெய்னோசா நகரில், வாகனத்தில் வந்த கும்பல் ஒன்று அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டது. இதில் அப்பாவி பொதுமக்கள் 15 பேர் உயிரிழந்தனர்.

பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் பின்னர், ​நகரங்களை நோக்கி மக்கள் ஓரளவுக்கு நேற்று (21) படையெடுத்திருந்தனர். ஒவ்வொரு கடைகள், வர்த்தக நிலையங்கள் ஏன், மதுபான சாலைகளுக்கு முன்பாகவும் மக்கள் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.

பழைய வழக்குகளை விசாரிப்பதற்கு ஒரு பொறிமுறையை உருவாக்கவேண்டும் அதில் மாற்றுக் கருத்துகளுக்கு இ​டமில்லை எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், கடந்த ஒரு மாதத்துக்குள் 100க்கு மேற்பட்டவர்கள் புதிதாக கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுக்கவேண்டும்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி