ஆபிரிக்க - அமெரிக்கரான ஜார்ஜ் ஃப்ளாய்ட் கடந்த ஆண்டு மின்னியாபோலிஸ் நகரத்தில் கைது செய்யப்பட்டபோது உயிரிழந்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் காவல் அதிகாரி குற்றவாளி என்று இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

மே தினக் கூட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது, கொரோனா ஒழிப்பு பற்றிய தேசிய செயலணி இன்று பகல் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையில் இடம்பெற்றது.

கஞ்சா வளர்ப்பினை சட்டரீதியாக அனுமதிக்க வேண்டும் என்றும், அரச முயற்சியில் அவற்றை பயிரிட்டு ஏற்றுமதி செய்யவும் வேண்டும் எனவும் ஆளுங்கட்சி பெண் நாடாளுமன்ற உறுப்பினரான டயானா கமகே யோசனை முன்வைத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோது அவர் இதனைக் கூறினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இம்முறை மே தினக் கூட்டத்தை தனித்து நடத்த தீர்மானித்துள்ளது. கட்சியின் மத்திய குழு மற்றும் பாராளுமன்ற குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கட்சி தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தலில், தொகுதி ஒன்றுக்காக, கட்சி ஒன்றிலிருந்து மூவர் போட்டியிடுவதற்கான யோசனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாகாண சபைக்காக புதிய முறைகளை உருவாக்குகின்ற போது தனித்தமிழ் மக்களை மாத்திரம் உள்ளடக்கியதாக 25 தமிழ் தொகுதிகள் உருவாக்கப்பட வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

பொலனறுவை முதல் கொழும்பு வரையில் சேவையில் ஈடுபடுத்தப்படும் கடுகதி ரயில் சேவையினை மட்டக்களப்பிலிருந்து ஆரம்பிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட பத்து கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளவில்லை.

இலங்கை விமானப்படையினால் விமான மூலம் உகண்டாவிற்கு அனுப்பட்ட 102 தொன் எடை கொண்ட ‘முத்திரையிடப்பட்ட பொருட்கள்” சம்பந்தமாக சந்தேகம் எழுந்துள்ளது.

அமெரிக்காவின் விண்வெளி அமைப்பான நாசா, வெற்றிகரமாக ஒரு சிறிய ஹெலிகொப்டரை செவ்வாய் கோளில் பறக்கவிட்டு சாதனை படைத்துள்ளது.

Feature

அபயராம விகாரையின் விகாராதிபதி முறுதெட்டுவே ஆனந்த தேரர், “இலங்கை, சீனாவின் கொலனியாவதற்கு நாம் அனுமதிக்க மாட்டோம்” என்று, ‘போட் சிட்டி’ ஆணைக்குழு சட்டமூலத்துக்கு எதிராகச் சில தினங்களுக்கு முன்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போது கூறியிருந்தார்.   

Feature

சிங்கப்பூர் அல்லது டுபாய் நாடுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள பொருளாதார நகரம் போன்ற நகரத்தை உருவாக்குவதைத் தாம் எதிர்க்கவில்லை எனவும், பொருளாதார நகரம் என்ற பெயரில் சீன ஈழம் ஒன்றை உருவாக்கும்முயற்சியைத் தாம் கடுமையாக எதிர்ப்பதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.

இன்று (19) கூட்டப்பட்ட அரசாங்கக் கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமை வகித்தார்.அமைச்சர்கள் வாசுதேவ நானாயக்கார, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் வெளிநடப்பு செய்ததாக சில ஊடகங்களில் வெளியான அறிக்கைகளில் உண்மை இல்லை என பிரதமரின் ஊடகப் பிரிவுத் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Feature

தென்னிலங்கை மக்களுடைய உரிமைகளை, எதிர்ப்புகளுக்காக கூறிய காரணத்தை கண்டறிந்து, அதனை சரி செய்ய முன்வர வேண்டுமெனத் தெரிவித்த வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்,

உலக மூலதனத்திற்கு ஏகாதிபத்திய அதிகாரப் போட்டிக்கு மக்களை பலியாக்கும் துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலத்தைத் தோற்கடிப்போம் என்ற தொனிப்பொருளில் புதுக்கடை நீதிமன்றத்தின் முன்பாக முன்னிலை சோஷலிஸக் கட்சி இன்று காலை ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி