மெக்சிகோ எல்லை துப்பாக்கிச் சூட்டில் 19 பேர் உயிரிழந்ததை அடுத்து ‘முழுமையான விசாரணைக்கு’ மெக்சிகோ ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.மெக்சிகோவின் ரெய்னோசா நகரில், வாகனத்தில் வந்த கும்பல் ஒன்று அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டது. இதில் அப்பாவி பொதுமக்கள் 15 பேர் உயிரிழந்தனர்.

துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர்கள் மீது எல்லை பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில், வன்முறை கும்பலை சேர்ந்த நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மெக்சிகோவில் கடந்த 2 ஆண்டுகளாக கொலைகள் அதிகரித்து வருகிறது.  2019 இல் 34,681 கொலைகளும், 2020 ல் 34,554 கொலைகளும் பதிவாகியுள்ளன.

போதைப்பொருள், ஆயுதங்கள் மற்றும் மனித கடத்தல்கள் அங்கு அதிகரித்து வருகின்றன.

மெக்சிகோ ஜனாதிபதி  ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ரடோர்  19 பேர் கொல்லப்பட்ட எல்லை துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை நடத்தப்படும்.  கொல்லப்பட்டவர்களில்  15 பேர் அப்பாவி பார்வையாளர்கள்.இறந்த மற்ற நான்கு பேரும் துப்பாக்கி சூடு நடத்தியவர்கள்  என தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி