அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோரின் வசமிருக்கும் அமைச்சுகளில் சிலவற்றை அவ்விருவரிடமிருந்தும் அபகரிப்பதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருவதாக அறியமுடிகின்றது.

பொது மக்கள் மீது அரசாங்கத்தால் கட்டவிழ்த்து விடப்படும் அடக்கு முறைகள் தொடர்ந்தால் மக்களின் அடிப்படை உரிமைகள் கூட பறிபோகும் நிலை ஏற்படும் என எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.

அட்டாளைச்சேனை கடற்கரையிலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை (09) கடற்றொழிலுக்காகச் சென்ற இரு மீனவர்கள் இதுவரை கரைக்குத் திரும்பவில்லை என அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ரூ. 58 பில்லியனுக்கும் அதிகமாக செலுத்த வேண்டும் என்று எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில கூறுகிறார்.

தனிமைப்படுத்தல் என்பது சுகாதார வழிமுறையே தவிர, அதை தண்டனையாகவோ, தடுத்து வைப்பதற்கான முறையாகவோ பயன்படுத்தக் கூடாதென இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டுகிறது. சில நாட்களுக்கு முன்னர் கொத்தலாவல சட்டமூலத்திற்கு எதிராக நடைபெற்ற அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்ட, தற்போது கட்டாய தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளவர்கள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே சடடத்தரணிகள் சங்கம் மேற்கண்டவாறு கூறியுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நிதி அமைச்சர் பதவியை பசில் ராஜபக்ஷவுக்கு ஏன் வழங்கினார் என்று அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கூறுகையில், பொருளாதாரத்தை கட்டி எழுப்பும் அவரது திறமையே இதற்கு காரணம் என்றார்.

கேரளாவில் 14 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதை தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கேரளாவில் பதிவானது ஜிகா வைரஸ் தொற்றுதான் என்பதை புனேவின் தேசிய வைராலஜி நிறுவனம் உறுதி செய்துள்ளது.

இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்ட வௌிநாட்டவர்களுக்கு தனிமைப்படுத்தல் விதிமுறைகளை தளர்த்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு முரணாகுமெனவும், அத்தகைய ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் எதிர்காலத்திலும் கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் பீற்றிக்கொண்ட பொதுமக்கள் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகரவிற்கு இந்த ஆர்ப்பாட்டம் கன்னத்தில் அறைந்ததைப் போன்றதாகுமென பேசப்படுகிறது.

'சிரச' தொலைக்காட்சி அலைவரிசையின் தொகுப்பாளராக பணியாற்றிய கௌசி வெடிக்காராச்சி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கதிர்காமக் கந்தன் ஆலயம் மற்றும் உகந்தைமலை முருகன் ஆலயம் ஆகியவற்றின் வருடாந்த ஆடிவேல் விழா உற்சவம் இன்று 10.07.2021 ஆம் திகதி சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.

உயர்கல்வியை இராணுவமயமாக்குவதற்கு எதிராக கொழும்பில் இடம்பெற்ற போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட சிரேஷ்ட தொழிற்சங்கத் தலைவர் உள்ளிட்ட குழு மீதான தாக்குதல் சர்வதேச அளவில் கண்டனத்திற்குள்ளாகியுள்ளது.

சர்வதேச சமூகத்தின் முன் உள்ள அனைத்து சாதகமான அம்சங்களும் நேற்றைய சம்பவங்கள் மூலம் கழுவப்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

சீனாவே தமது உண்மையான நண்பன் என இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச வெளியிட்ட கருத்து, தெற்காசிய பிராந்திய அரசியலில் பேசுபொருள் ஆகியுள்ளது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி