பொத்துவில் உடும்புக்குளம் செல்வவெளி வயல் பகுதியில் உடலில் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக இன்று (16) காலையில் மீட்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக சந்தேகத்தில் இருவரை கைது செய்துள்ளதாக பொத்துவில் பொலிசார் தெரிவித்தனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் (CID) விசாரணைகள் முழுமையற்ற வகையில் காணப்படுவதாக, சட்ட மாஅதிபர் வெளியிட்டிருந்த அறிக்கை தொடர்பில், உடனடியாக அறிக்கையொன்றை வழங்குமாறு CIDயிடம், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கோரியுள்ளார்.

'நவரசம்' புத்தகத்தின் ஆசிரியர் கவிஞர் அஹ்னஃப் ஜஸீம் கைது செய்யப்பட்டு இன்றுடன் மே 16 ஒரு வருடமாகிறது. தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் அவர் இன்னும் பயங்கரவாத புலனாய்வு பிரிவின் காவலில் உள்ளார்.

அரசியல் தேவைகளை நிறைவேற்றவும் நெருங்கிய நண்பர்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் COVID தொற்றை பயன்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சியை கண்டிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

காசா நகரில் வெளிநாட்டு ஊடக நிறுவனங்கள் செயல்பட்டுவந்த கட்டிடத்தை ஒரு நொடியில் தாக்கி தரைமட்டமாக்கியது இஸ்ரேல். இந்த தாக்குதல் இன்று (சனிக்கிழமை) பிற்பகல் நடந்தது.

அறிகுறியற்ற கொரோனா நோயாளிகளை திங்கள்கிழமை முதல் தங்கள் வீடுகளில் கண்காணித்து சிகிச்சையளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமது பதவிக்காலத்திற்குள் ஏப்ரல் 21 தாக்குதலின் சூத்திரதாரிகளுக்கு எதிராக குற்றப்பத்திரத்தை தாக்கல் செய்ய முடியாமல் போனதாக சட்டமா அதிபர் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார்.

டோவா லெவி (இடது), நஜ்வா ஆகியோர் சண்டைகளால் தங்களது குழந்தைகளுக்கு என்ன ஆகுமோ என அஞ்சுகிறார்கள் காசா பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு அருகே ஏவுகணைகள் வந்து விழத் தொடங்கியது முதல் நஜ்வா ஷேக்-அகமது தூங்க முடியாமல் தவித்து வருகிறார்.

நண்பர்கள் குழுவுடன் மாத்தளையில் உள்ள சுற்றுலா பங்களாவில் வார இறுதி நாட்களைக் கழிக்கச் சென்ற அமைச்சர் ஒருவரின் மகள் அட்டைக்கடி காரணமாக தம்புல்ல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காசா மக்களுக்கு எதிரான இஸ்ரேலிய தாக்குதலையும், அத்துடன் இந்த மோதலுக்கு முன்னர் ஜெருசலேமில் நடத்தப்பட்டு அதற்கு எரியூட்டிய இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையையும் உலக சோசலிச வலைத் தளம் உறுதியாகக் கண்டிக்கிறது. இஸ்ரேலிய தொழிலாள வர்க்கம் உட்பட ஒட்டுமொத்த உலக தொழிலாளர்களும் பலஸ்தீன மக்களுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் இந்த ஆக்ரோஷ நடவடிக்கையை எதிர்க்க வேண்டும்.

முள்ளிவாய்க்கால் நினைவுகூரல் நிகழ்வுகளுக்குத் தடை விதிக்குமாறு, முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏழு பொலிஸ் நிலையங்களின் கோரிக்கையை ஏற்று நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

நாட்டில் கடந்த சில தினங்களாக நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை ஐவர் உயிரிழந்துள்ளதோடு நூற்றுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் மேலதி கணக்காய்வாளர் நாயகம் ஏ.எச்.எம். லலித் அம்பேவல திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.கண்டியில் அமைந்துள்ள அவரது வீட்டில் வைத்து நேற்று (13) காலையில் ஏற்பட்ட திடீர் மாரடைப்பினால் அவர் உயிரிழந்துள்ளார்.

இரண்டு நாட்களுக்குள் இரண்டு இளைஞர்கள் வழக்குகள் இன்றி சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது பொலிஸாரின் கடமைமெயன இலங்கையில் உள்ள சட்ட நிபுணர்களின் தலைமை அமைப்பு பொலிஸ் மாஅதிபருக்கு அறிவுறுத்தியுள்ளது.

தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடையை அடுத்து முல்லைத்தீவு மாவட்டத்தின் நகரங்கள் அனைத்தும்  முழுமையாக முடங்கியுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி