கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் மற்றும் கல்வி அமைச்சருக்கு இடையில் இன்று (27) பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை தொடர்பாக விசேட வர்த்தமானி  வெளியிடப்பட்டுள்ளது.அனைத்து சமையல் எரிவாயு சிலிண்டரிலும் அதன் எடை தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

2015 லண்டன் மாரத்தானில் எல்லைக் கோட்ட தொட்ட எலியட் கிப்சோகி உலகத்திலேயே வேகமாக ஓடும் மனிதர் யாரெனக் கேட்டால், உசேன் போல்ட் என்ற பொதுவான பதில் கிடைக்கும். ஆனால் அந்தப் பதிலை விவாதத்துக்கு உள்ளாக்குபவர் எலியட் கிப்சோகி.

வனஜீவராசிகள் திணைக்களத்தின் கீழுள்ள அனைத்து தேசிய பூங்காக்களும் இன்று (26) முதல் மீண்டும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்படுகின்றன.

கடந்த சில நாட்களாக ஜந்தர் மந்தரில் விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடந்த நவம்பர் மாதம் முதல் போராட்டங்கள் நடந்து வருகிறது. பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு வருகின்றனர்.

பிரபல நடிகையும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய உபேக்ஷா ஸ்வர்ணமாலி, விபத்தொன்றை ஏற்படுத்தியதற்காக கட்டுகஸ்தோட்ட பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காலி தொடக்கம் மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டையினூடாக பொத்துவில் வரையிலான கடற்பிராந்தியங்கள் மற்றும் புத்தளத்தில் இருந்து மன்னாரினூடாக காங்கேசன்துறை வரையிலான கடற்பிராந்தியங்களில் காற்று மணித்தியாலத்திற்கு 60 கிலோமீட்டர் வரை அதிகரித்து வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

சேர்.ஜோன் கொத்தலாவ தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலத்தை மீள பெறுமாறும் இலவசக் கல்வி உரிமையை பாதுகாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி பூண்டுலோயாவில் போராட்டமொன்று இன்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.

அவுஸ்திரேலியாவில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின்போது பொலிசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.

புதிதாக செயலாளராக நியமனம் பெற்றிருப்பவர் மக்களின் மொழியில் செயலாற்றமாட்டார் என்பது எல்லோரும் அறிந்த விடயம். அவரின் ஆங்கில அறிவு பற்றியும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஒன்று மட்டும் நிச்சயம். அவர் ஊடாக சிங்கள ஆதிக்கம் பலனடையும் தமிழ் மொழிப் பாவனை நலிவடையும் என வடமாகாண முன்னாள் முதலமைச்சரும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கே.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்

தடுப்பூசி போடும் பணி மந்தமாக நடைபெற்று வருவதற்காக அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் மன்னிப்பு கோரியுள்ளார்.

அமைச்சர்களுக்கு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ விசேட உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.அதாவது, மேலதிக செலவுகளை ஈடுசெய்யும் வகையில் குறை நிரப்பு பிரேரணையை ஏற்பாடு செய்ய வேண்டாம் என்று அவர் கூறியுள்ளார்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் கொவிட் தடுப்பூசி திட்டத்தின் முன்னேற்றம் குறித்து கிராம நிலதாரிகள் தெரிவிக்க வேண்டும் என்று ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

சீனாவில் ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத வகையில் பெய்த வரலாறு காணாத மழைக்கு 51 பேர் பலியாகி உள்ளனர்.சீனாவில் ஒவ்வோர் ஆண்டும் பலத்த மழை பெய்து வருகிறது.  இதனால் ஏற்படும் பெரு வெள்ளத்திற்கு பலர் உயிரிழக்கின்றனர். பொருட்களும் சேதமடைகின்றன.  இந்த நிலையில், ஹெனான் மாகாணத்தில் கடந்த சனிக்கிழமை முதல் பலத்த மழை பெய்தது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி