கடந்த பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த வேட்பாளர்களுக்கு அரசு பதவிகளை வழங்க வேண்டாம் என்று ஜனாதிபதி எடுத்த முடிவு இப்போது சிலரால் மீளப் பெறப்படுகிறது. தோல்வியுற்றவர்கள் அரச நிறுவனங்களின் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த அனுர பெர்னாந்து sea bank தலைவராகவும், அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த கீர்த்தி ஸ்ரீ வீரசிங்க தெங்கு அபிவிருத்தி சங்கத்தின் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க சார்பு 'லங்கா சி நியூஸ்' தெரிவித்துள்ளது.

அவ்வாறு தோல்வியடைந்தவர்களுக்கு உயர் பதவிகளை வழங்க அனுமதித்தால், அமைச்சர்கள் குழுவும் அதே பதவிகளை தங்களுக்கும் வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரத் தயாராக இருப்பதாக தெரியவருகின்றது.

இதற்கிடையில், மாத்தரை மாவட்டத்தில் இருந்து கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த லக்ஸ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு ஆளுநர் பதவி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி