தடுப்புக் காவல் கைதிகளுக்கு வழங்கப்படும் சகல வசதிகளையும் அஹ்னாப் ஜசீமிற்கு வழங்க உத்தரவு!
ஒரு வருட காலத்திற்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டு தற்போது தடுப்புக் காவலில் உள்ள கவிஞர் அஹ்னாப் ஜசீமை அவரது உறவினர்களும், சட்டத்தரணிகளும் சந்திக்க அனுமதிப்பது உள்ளிட்ட ஏனைய தடுப்புக் காவல் கைதிகளுக்கு வழங்கப்படும் சகல வசதிகளையும் வழங்குமாறு கடந்த 22ம் திகதி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.