ஸ்மார்ட் கெப்​ வாகனங்களின் டபல் கெப் மொடல்களை இறக்குமதி செய்ததில் சமீப காலங்களில் குறைந்த சுங்க வரி விதிக்கப்படுவதை குழு கவனித்துள்ளது.

உறுப்பினர்களை கட்சியிலிருந்து கட்சிக்கு மாற்றுவதற்கான எதிர்பார்ப்பில் இரண்டு எதிர்க்கட்சிகளும், அதன் கதவுகளைத் திறந்து வைத்திருப்பதாக அறிவித்துள்ளன.சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ரணில் விக்ரமசிங்கவை மாத்திரமே நாடாளுமன்ற உறுப்பினராகக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய இரு கட்சிகளுமே இவ்வாறு எதிர்பார்ப்பில் உள்ளன.

அவசரகால பயன்பாட்டிற்கு கோவேக்ஸ் தடுப்பூசிக்கு அனுமதி வழங்குவது குறித்து பரிசீலனை செய்து வருவதாக உலக சுகாதார அமைப்பு தனது இணைய பக்கத்தில்  குறிப்பிட்டுள்ளது.

ஜே.வி.பி,முன்னிலை சோசலிச கட்சிகளுக்கு இடையே நல்லிணக்கத்திற்கான வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

பாரம்பரியத்திற்கு அப்பாற்பட்ட மின் துறையின் திசையை எடுத்துக் கொண்டு, மிதக்கும் சூரிய மின்னுற்பத்தி திட்டத்தை (Floating Solar System) விரைவுபடுத்த வேண்டும் என்று மின் மற்றும் எரிசக்தி அமைச்சர் டலஸ் அலஹபெரும கூறுகிறார்.

பாரத லக்ஷமன் பிரேமச்சந்திரவின் படுகொலை தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு  ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டமை அரசியலமைப்புக்கு முரணான விடயம் என அறிவிக்குமாறு கோரிக்கை விடுத்து மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கப்பலினால் நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பிலான விசாரணைகளுக்காக, சர்வதேசத்தின் ஒத்துழைப்பினை பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவில் அமைந்திருக்கும் வடக்கு காரோ மலைப்பகுதிகளில், இன்று அதிகாலை 2.10 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.1 என்ற அளவில் பதிவாகி இருப்பதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஊடக சுதந்திரத்திற்கு எதிராக மீண்டும் தலைதூக்கி வரும் அச்சுறுத்தல்கள் ஊடகவியலாளர்களின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கி வருவதாக யாழ். ஊடக அமையம் தெரிவித்துள்ளது.

அரசாங்கம் ஆட்சிக்கு வந்து பத்து மாதங்களில் நாட்டில் பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தி இருக்கின்றது.இவ்வாறு கின்னஸ் சாதனை படைத்திருக்கும் அரசாங்கத்துக்கு எதிராவே நம்பிக்கையில்லா பிரேரணைய கொண்டுவரவேண்டும்.

குஷ்புவின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்து முடக்கப்பட்டு உள்ளது. அவரது பதிவுகள் அனைத்தும் அழிக்கப்பட்டு உள்ளது.நடிகையும், பா.ஜ.க நிர்வாகியான நடிகை குஷ்பு டிவிட்டர் வலைதளத்தில் ஆக்டிவாக இருந்தார் .தற்போது  @khushsundar  என்ற அவரது டுவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டு முடக்கப்பட்டு உள்ளது.அவரது அனைத்து பதிவுகளும் அழிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முஸ்லிம்களின் திருமண வழக்குகள் தொடர்பான நடைமுறைகளை திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.அதன்படி இஸ்லாம் மதத்தை பின்பற்றுபவர்கள் திருமண பதிவு கட்டளை சட்டத்தின் கீழ் திருமணம் செய்வதற்கு எதிர்பார்ப்பார்களாயின், அதற்கான சட்ட ஏற்பாடுகளை செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

முன்னாள் அமைச்சரின் வீட்டில் பணிபுரிந்த சிறுமியின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கக் கோரி ஹட்டனில் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

கொழும்பு தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையிலுள்ள மிருகங்களுக்கு கொடுப்பதற்கு உணவு வாங்குவதற்குக் கூட பணம் இல்லாத நெருக்கடி நிலைமை ஏற்பட்டிருப்பதாக அரசாங்கம் தெரிவிக்கின்றது.

நவாலி - ஆனைக்கோட்டை பிரதான வீதி அகலிப்புப் பணிகள் தந்போது நடைபெற்று வரும் நிலையில், மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையில் ஒரு முரண்பாடான நிலை காணப்படுவதாக தெரியவருகின்றது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி