கடந்த 1,000 ஆண்டுகளில் இல்லாத வகையில் சீனாவில் வரலாறு காணாத மழை 51 பேர் பலி!
சீனாவில் ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத வகையில் பெய்த வரலாறு காணாத மழைக்கு 51 பேர் பலியாகி உள்ளனர்.சீனாவில் ஒவ்வோர் ஆண்டும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்படும் பெரு வெள்ளத்திற்கு பலர் உயிரிழக்கின்றனர். பொருட்களும் சேதமடைகின்றன. இந்த நிலையில், ஹெனான் மாகாணத்தில் கடந்த சனிக்கிழமை முதல் பலத்த மழை பெய்தது.