குற்றமற்றவர்களையும் சிறைக்குள் தள்ளி குற்றவாளியாக்கவும், குற்றம் சுமத்தாது வருடக் கணக்காக தடுத்து வைக்கவும் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திறந்த பொருளாதாரக் கொள்கைக்குப் பின்னர் நாட்டில் இலஞ்சம் மற்றும் ஊழல் அதிகரித்ததை நினைவுகூர்ந்துள்ள, சிவில் சமூகம் மற்றும் வெகுஜன அமைப்புகள் 1978ற்குப் பின்னர், ஏற்பட்ட பொருளாதார மற்றும் சமூக எழுச்சியுடன் சமூக ரீதியாக களங்கப்படுத்தப்பட்ட சிலர் நாட்டின் தலைசிறந்த அரசியல்வாதிகளாக மாறியுள்ளதாக  சுட்டிக்காட்டுகின்றது.

ஆசிரியரும் கவிஞருமான அஹ்னாஃப் ஜசீம் பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஞாயிற்றுக்கிழமை வாக்குபதிவு நடந்த இராக் நாடாளுமன்ற தேர்தலில் தமது சேரோன் இயக்கம் வெற்றி பெற்றுள்ளதாக இஸ்லாமிய மதகுரு மூக்ததா அல்-சதர் தெரிவித்துள்ளார்.

மன்னாரிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள தமிழகத்தின் இராமநாதபுரம் கீழக்கரை கடலில் மீன்கள் உயிரிழந்து மிதப்பதால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

இலங்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabhaya Rajapaksha) தலைமையிலான அரசின் ஆட்சி தொடர்ந்தால் பட்டினியால் மக்கள் செத்து மடிவார்கள் என்று ஐக்கிய தேசியக் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு (R. Sampanthan) பின்னர் அந்த தலைமைப் பதவியை பெற்றுக் கொள்ள தாம் தகுதியானவர் என த.தே.கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் (M.A.Sumanthiran) தெரிவித்துள்ளார்.

'முல்லைத்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய அடாவடிச் செயற்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில், அவற்றைக் கட்டுப்படுத்தவேண்டிய கடற்றொழில் அமைச்சர், கடற்படையினர் மற்றும், கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களம் ஆகிய தரப்புகள் தூக்கத்தில் இருக்கின்றார்களா?' என, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

ஆரோக்கியமான பாடசாலை மாணவர்களுக்கு  கொரோனா தடுப்பூசி கொடுக்க வேண்டிய அவசியமில்லை என்று,  பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஆசிரியர் மற்றும் அதிபர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு இடையே இன்றையதினம் அலரிமாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடல் இறுதி முடிவு எட்டப்படாமல் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய இராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நாராவன (Manoj Mukund Naravana), ஐந்து நாள்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, இன்று இலங்கையை வந்தடைந்தார்.

சிரியாவின் வடக்கே துருக்கி எல்லையில் அலிப்போ மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தின் சில பகுதிகளை துருக்கி கைப்பற்றியுள்ளது. இப்பகுதியில் குர்திஷ் கிளர்ச்சியாளர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

கறுவாப் பட்டை விவசாயத்துக்காக உரத்தைத் தருமாறு கேட்டு அஹுங்கல்ல- பொத்ஹது பகுதியில் கறுவாப் பட்டை விவசாயிகள் கொடும்பாவி எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தம்மை விடுதலை செய்யுமாறு உத்தரவிடுமாறு கோரி, மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் இன்று (11) அனுமதி வழங்கியுள்ளது.

வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஜீவன்தியாகராஜா தனக்கான நியமன கடிதத்தை பெற்றுக்கொண்டுள்ளார். ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிடமிருந்து அவர் தனது நியமனக்கடிதத்தை இன்று பெற்றுக்கொண்டார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி