ஆப்கானிஸ்தான் விவகாரங்களை கவனிக்க பாகிஸ்தானில் தனிப் பிரிவு! இம்ரான் கான் உத்தரவு
ஆப்கானிஸ்தானின் தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு, பாகிஸ்தானில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு குழுவுடன் அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.