தெற்கிற்கு லக்ஸ்மண் யாப்பா ஆளுராக நியமிக்கப்படவுள்ளார்!
அரசாங்க உள் வட்டாரங்களின்படி, பல ஆளுனர்களின் பதவிகள் அல்லது மாகாணங்கள் மாறக்கூடும் என அறியக்கிடைக்கின்றது.
அரசாங்க உள் வட்டாரங்களின்படி, பல ஆளுனர்களின் பதவிகள் அல்லது மாகாணங்கள் மாறக்கூடும் என அறியக்கிடைக்கின்றது.
ஒரே நாடு ஒரே தேசம் என்ற ஸ்டிக்கர்களை வாகனங்களின் பின்னால் மட்டும் பொருத்திக் கொள்வது போதுமானதாக இருக்காது என்றும், இந்த எண்ணம் அனைவரின் உள்ளங்களிலும் பொறிக்கப்பட வேண்டும் என்றும் பதுளை, ஹாலி – எல பிரதேச சபையின் சுயாதீன வேட்பாளர் அருண் வெங்கடேஷ் தெரிவித்தார்.
தமது கோரிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு வலியுறுத்தி இன்று நண்பகல் 12 மணி முதல் 1 மணி வரை அரச தாதியர்கள் சங்கம் நாடளாவிய ரீதியில் இன்று (28) போராட்டமொன்றை நடத்தியது.
இலவச கல்வியை இராணுவ மயமாக்கும் கொத்தலாவல சட்ட மூலத்தை உடனடியாக நீக்கக் கோரி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை மறுசீரமைப்பிற்கான முன்மொழிவுகளை பகுப்பாய்வு செய்யும் நிபுணர் குழுவின் தலைவராக சிரேஷ்ட பேராசிரியர் சுதந்த லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்.
வெறும் 63 ஆயிரம் மக்கள் தொகையைக் கொண்ட குட்டி நாடான பெர்முடா ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற மிகச் சிறிய நாடு என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது.
நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் நம் நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப, சமூகத்தில் அணுகுமுறையில் மாற்றம் தேவை என சமூக ஆர்வலரும் ஊடகவியலாளருமான பாக்யா வீரகோன் கூறுகிறார்.
ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கத்தினரின் பணிப்பகிஷ்கரிப்பு 17 ஆவது நாளை எட்டியுள்ளது.பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுக்கு இடையிலான நேற்றைய (27) பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி நிறைவு பெற்றது.
கர்நாடக முதல்- அமைச்சராக இருந்த எடியூரப்பா நேற்று முன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார். பா.ஜனதா மேலிடம் உத்தரவிட்டதை அடுத்து அவர் பதவி விலகினார். இதையடுத்து கர்நாடகத்தின் அடுத்த முதல்- அமைச்சர் யார்? என்ற பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் பெங்களூருவில் நேற்று இரவு நடைபெற்றது.
பெகாசஸ் உளவு செயலி மூலம் இந்தியாவில் பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள் உளவு பார்க்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் பக்கசார்பற்ற விசாரணை நடத்த வலியுறுத்தி கொல்கத்தாவில் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தொண்டர்கள்.நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 'மே 17' இயக்கத்தின் திருமுருகன் காந்தி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் கு. ராமகிருஷ்ணன், திராவிடர் கழக பொருளாளர் குமரேசன் ஆகியரது தொலைபேசிகள் பெகாசஸ் உளவுச் செயலியால் குறிவைக்கப்பட்டதாக தற்போது தெரியவந்துள்ளது.
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் மேலும் 13 ஏக்கர் நிலத்தை சீனாவிடம் ஒப்படைக்க அரசாங்கம் தயாராகி வருகிறது.சீன நிறுவனமான சி.ஐ.சி.டி யால் பல்வேறு சேவை வழங்கல் சேவைகளுக்கான மையத்தை அமைக்கும் திட்டத்திற்கு அரசாங்கத்தின் ஒப்புதல் கோரி துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன நேற்று (26) அமைச்சரவைக்கு சமர்ப்பித்தார்.
மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிக பெறுமதியான நட்சத்திர நீல மாணிக்கக் கற்களின் திரட்சி இரத்தினபுரி பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கும் ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுக்குமிடையிலான பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி நிறைவு பெற்றுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளைப் பார்ப்பதற்காக விளையாட்டு அமைச்சருடன் மூன்று இராஜாங்க அமைச்சர்கள், அனுசரணையாளர்களிடம் இருந்து பெற்ற நிதியைக்கொண்டே ஜப்பானுக்குச் சென்றுள்ளனர் என்றும் அரச நிதியிலிருந்து அல்ல என்றும் அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக மற்றும் தகவல் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் சம்பள முரண்பாடுகளை தீர்க்க வேண்டிய நிலை காணப்பட்டாலும் நாட்டின் தற்போதைய நிதி நிலைமைகளின் அடிப்படையில் தேவையான மாற்றங்களைச் செய்ய போதுமான நிதி பலம் இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.