யுகதனவிய மின் நிலையத்திற்குரிய பங்குகளை அமெரிக்க நிறுவனத்திடம் ஒப்படைக்கும் தீர்மானத்திற்கு எதிராக மனுத்தாக்கல்!
கெரவலபிட்டிய, யுகதனவி மின் நிலையத்திற்குரிய 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனமொன்றிடம் ஒப்படைக்கும் அமைச்சரவைத் தீர்மானத்தை நிறுத்த உத்தரவிடுமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது எல்லே குணவன்ச தேரர் மற்றும் கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் ஆகியோரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.