தேசிய சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தமது பதவிகளிலிருந்து இராஜினாமா செய்துள்ளனர்.

அமெரிக்க டொலருக்கு எதிராக உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ரூபாவின் பெறுமதி 230 ரூபாவாக வீழ்ச்சியடைய இலங்கை மத்திய வங்கி அனுமதி வழங்கியுள்ளது.

தமிழ் ஊடகவியலாளர் முருகுப்பிள்ளை கோகுலதாசன், போரில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து முகநூலில் பதிவிட்டதாகக் கூறி, கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தமிழ் ஊடகவியலாளருக்கு 470 நாட்களின் பின், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கார்கிவ் அருகே நடந்த சண்டையின் போது உக்ரைன் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ள ரஷ்ய படைகளின் முக்கிய தளபதி ஒருவர் கொல்லப்பட்டதாக உக்ரைன் பாதுகாப்பு உளவுத்துறை தெரிவித்துள்ளது.

பயங்கரவாதச் சட்டம், இராணுவமயமாக்கல் மற்றும் இலங்கையில் ஒட்டுமொத்தமாக சீரழிந்து வரும் மனித உரிமை நிலைமை தெடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ மனித உரிமைகள் பேரவையின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்

அரசாங்கத்தினுடைய முரண்பாடுகளுக்கு பின்னால் உள்ள சர்வதேச அரசியல் நெருக்கடி தொடர்பில் கடந்த தினங்களில் ரட்டே ரால தொடர்ச்சியாக குறிப்பிட்டு வந்தார். கீழ்த்தரமான அவமதிப்பு, அவமானங்கள் சிலவும் ஏற்பட்டன. இருப்பினும் உண்மையை சொல்லப்போனால் ஏன் பயப்பட வேண்டும். ரட்டே ரால சாவதற்கு முன் அல்லது கொலை செய்யப்படுவதற்கு முன்னர் உண்மையை குறிப்பிடுவார். ஏனென்றால் இந்தப் பிரச்சினை இன்னும் பல வடிவங்களைக் கொண்டுள்ளது. தற்போது ரட்டே ரால குறிப்பிடுவது இதன் உள்ளே இருக்கக்கூடிய மஹிந்தவின் தேவைப்பாடு தொடர்பில், அதேபோன்று பெசிலின் தேவைப்பாடு தொடர்பில் மட்டுமே. இன்னும் மைத்திரியின் உடைய தேவைப்பாடு தொடர்பிலும் கதைக்க முடியும்.

உக்ரைனுக்குள் கடந்த மாதம் 24ம் திகதி நுழைந்த ரஷ்ய இராணுவம், தலைநகர் கீவ் மற்றும் 2வது பெரிய நகரமான கார்கிவ் உள்ளிட்ட இடங்களை குறிவைத்து தாக்கி வருகின்றதுடன், சில இடங்கள் முழுமையாக ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளன.

மின்சாரத்தை சேமிக்கும் நோக்கில் இன்று முதல் மார்ச் 31 ஆம் திகதி வரை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கீழுள்ள அனைத்து உள்ளூராட்சி மன்றங்களின் கீழுள்ள பிரதேசங்களில் வீதி விளக்குகளை அனைத்து வைக்குமாறு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு - கோட்டையில் அமைந்துள்ள  ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகம் மீது முட்டை வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் பிறந்த தினம் இன்று (மார்ச் 07) அனுராதபுரத்தில் தேசிய சுதந்திர முன்னணி பல விஷேட சமய நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது.

உக்ரைன் மீது 12 ஆவது நாளாக ரஷ்யா போர் தொடங்கி தாக்குதல் நடாத்தி வருகின்ற நிலையில், ரஷ்யா கைப்பற்றிய முக்கிய நகரை உக்ரைன் மீண்டும் கைப்பற்றியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நாட்டில் நிலவும் டீசல் தட்டுப்பாடு காரணமாக, தனியார் பேருந்து சேவைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் ஏற்கெனவே தெரிவித்திருந்த நிலையில், இன்று மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பேருந்து சேவைகள் இடம்பெறும், இரவில் பேருந்து சேவைகள் இடம்பெறாது என அறிவித்துள்ளது.

" நாட்டில் பெற்றோல் இல்லை. டீசலும் இல்லை. மின்சாரமும் இல்லை. இவை இல்லாததால் தொழிற்சாலைகள் இயங்கவில்லை அதனால் முதலீட்டாளர்களுக்கு வருமானம் இல்லை. ஊழியர்களுக்கு சம்பளமும் இல்லை. அரிசி வாங்க காசு இல்லை. குடிப்பதற்கு பால்மாவும் இல்லை”

விமலும் கம்மன்பிலவும் இல்லாத மொட்டு எவ்வாறானது? யாராவது உங்களிடம் கேட்டால் நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?ரட்டே ரால குறிப்பிடுவது பருப்பு இல்லாத ஹோட்டலை போன்று. உண்மையில் விமல் மற்றும் கம்மன்பில இல்லாமல் இருப்பது மொட்டுவுக்கு எவ்வாறு தாக்கம் செலுத்தும்? அது மொட்டுக்கு சாதகமானதா பாதகமானதா ? அது தொடர்பில் நியாயமான ஒரு ஆய்வை மேற்கொள்வதாக இருந்தால் தற்போது மொட்டுவில் இருக்கக்கூடிய எண்ணிக்கையை சரியாக விளங்கிக் கொள்ளுதல் வேண்டும்.

டாக்டர் பாலித சேரசிங்க உலகப் புகழ்பெற்ற ஆயுர்வேத மருத்துவர் மட்டுமின்றி ஒரு ஆசிரியர் மற்றும் ஆராய்ச்சியாளர் ஆவார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி