உக்ரைனுக்குள் கடந்த மாதம் 24ம் திகதி நுழைந்த ரஷ்ய இராணுவம், தலைநகர் கீவ் மற்றும் 2வது பெரிய நகரமான கார்கிவ் உள்ளிட்ட இடங்களை குறிவைத்து தாக்கி வருகின்றதுடன், சில இடங்கள் முழுமையாக ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளன.

 

இந்நிலையில் மேற்கத்திய நாடுகளை குறைத்து மதிப்பிட வேண்டாம், பொறுமை காக்கும் எங்களை வீணாக சோதிக்க வேண்டாம் என்றும் பிரித்தானியப் பாதுகாப்பு செயலாளர் பென் வாலஸ் ரஷ்யாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் பிரித்தானிய நட்பு நாடுகள் விளாடிமிர் புடின் தொடர்பில் அச்சம் கொள்ள தேவை இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

உக்ரைனிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், உலக நாடுகள் பல ரஷ்யாவிற்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளையும், உக்ரைனுக்கு பல போர் ஆயுதங்களையும்,நிதியுதவியினையும் வழங்கி வருகின்றது.

இதேவேளை உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி  தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது உலக நாடுகள் இந்த போரை இனியும் வேடிக்கை பார்க்கக் கூடாது.

எங்களுக்கு உதவ முன்வரவேண்டும். எங்களுக்கு தேவையான ஆயுதங்களை தாருங்கள் எனவும், போர் நிலவரம் மற்றும் எதிர்கால சூழ்நிலை பற்றி இதன்போது அவர் உருக்கமாக பல்வேறு தகவல்களை வெளியிட்டார்.

அவர் குறிப்பிட்டதாவது, ரஷ்ய ராணுவத்தால்  எனது உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது. இதுவே நீங்கள் என்னை பார்க்கும் கடைசி தருணமாகக் கூட இருக்கலாம்.

உலக நாடுகள் இந்த போரை இனியும் வேடிக்கை பார்க்கக் கூடாது. எங்களுக்கு உதவ முன்வரவேண்டும். எங்களுக்கு தேவையான ஆயுதங்களை தாருங்கள்.

ஐரோப்பிய நாடுகள் ஒருங்கிணைந்து எங்களுக்கு அதிக போர்விமானங்களை வழங்க வேண்டும். அப்படி கொடுத்தால்தான் உக்ரைன் தன்னை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

இந்த வி‌டயத்தில் ஐரோப்பிய நாடுகள் நல்ல முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கிறேன். என்னை படுகொலை செய்வதற்கு ரஷ்ய அதிபர் புடின் சிறப்பு படைகளை அனுப்பி உள்ளார்.

நூற்றுக்கணக்கான ரஷ்ய உளவுப்படைகள் கீவ் நகரில் உள்ளன. அவர்கள் என்னை குறி வைத்து நகர்ந்து வருகிறார்கள். எந்த நேரத்திலும் நான் படுகொலை செய்யப்படலாம். இதை எல்லாம் நான் ஏற்கனவே நன்கு உணர்ந்துள்ளேன்.

எனவே உக்ரைன் நாட்டு நலனுக்காக மாற்றுத்திட்டங்களை ஏற்கனவே தயார் செய்து வைத்துவிட்டேன். நான் கொல்லப்பட்டாலும் உக்ரைனில் இந்த ஆட்சி தொடர்ந்து நடைபெறும்.

அதை யாராலும் முடக்க முடியாது. எனக்கு பிறகும் உக்ரைன் நாட்டை பாதுகாத்துக் கொள்ள மக்கள் துணிந்து போராடுவார்கள் என்றும்,

இதற்காக வெளிநாடுகளில் உள்ள உக்ரைன் மக்கள் வந்து கொண்டு இருக்கிறார்கள். எங்கள் மண்ணை நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம். ஒரு போதும் பின்வாங்கும் பேச்சுக்கே இடம் இல்லை என குறிப்பிட்டுள்ளார். 

மேலும் உக்ரைன் அதிபரை மீட்டுவர பிரித்தானியா மற்றும் அமெரிக்க சிறப்பு படைகள் தயாராக இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

லிதுவேனியா நாட்டில் 70 பிரித்தானிய வீரர்களும் 150 அமெரிக்க வீரர்களும் இரவு நேர இரகசிய பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், இவர்களுடன் உக்ரேனிய சிறப்பு படை வீரர்களும் இணைந்துள்ளதாக மேற்கத்தேய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

ஆனால், சொந்த நாட்டையும் மக்களையும் விட்டு  இவ் இக்கட்டான சூழ்நிலையில் தாம் நாட்டைவிட்டு வெளியேற முடியாது என உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மறுத்து வருவதாகவும், போருக்கான ஆயுதங்களும் உதவியும் போதும் என அமெரிக்காவிடம் முறையிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி