உக்ரைன் மீது 12 ஆவது நாளாக ரஷ்யா போர் தொடங்கி தாக்குதல் நடாத்தி வருகின்ற நிலையில், ரஷ்யா கைப்பற்றிய முக்கிய நகரை உக்ரைன் மீண்டும் கைப்பற்றியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் இரண்டாவது பெரிய நகரான கார்கிவ் ஆகியவற்றை கைப்பற்ற ரஷ்யப் படைகள் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில்,

உக்ரைனின் மத்திய, வடக்கு, தெற்கில் இருக்கும் நகரங்களில் இரவு நேரத்திலும் ரஷ்யப் படைகள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டு அரசு தெரிவித்திருந்தது.

முக்கிய நகரங்களில் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தியதைத் தொடர்ந்து அவர்களுக்கு எதிராக உக்ரைன் இராணுவமும் கடுமையாகப் போராடி கொண்டிருக்கிறது.

உக்ரைனின் கெர்சன் உள்ளிட்ட சில நகரங்களை ரஷ்யப் படைகள் கைப்பற்றியுள்ளன. மேலும் அந்நாட்டின் 02 அணுமின் நிலையங்களும் ரஷ்யா வசம் சென்றுள்ள நிலையில்.   

உக்ரைனிலுள்ள முக்கிய நகரமான கார்கிவ் நகர மையத்திலிருந்து தென்கிழக்கே 36 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள Chuhuivவை ரஷ்யா சமீபத்தில் கைப்பற்றியிரந்தது. இந்த நிலையில் விடா முயற்சியுடன் அந்த நகரை மீட்க போராடிய உக்ரைன் மீண்டும் கைப்பற்றியுள்ளது.

இந்த தாக்குதலில் ரஷ்ய வீரர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். சில முக்கிய தளபதிகளும் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதலில் உக்ரைன் வீரர்களை விட ரஷ்ய வீரர்களே பல மடங்கு உயிரிழப்புகளையும் காயங்களையும் சந்தித்துள்ளனர்.

உக்ரைனின் ஆயுதப் படைகளின் இந்த தொடர் தாக்குதலை ரஷ்ய வீரர்கள் சமாளிக்க முடியாமல் நகரை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி