உரம் பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளிடமும்,  நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்களிடமும் பகிரங்க மன்னிப்பு கோருகிறேன் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.

இலங்கையில் அதிகரித்துவரும் வாழ்க்கை செலவு மற்றும் அத்தியவசிய பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக மக்கள் தற்போதைய அரசின் மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.


எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகேவின் சாரதி அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


புத்தாண்டு காலம் வரை லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக 'லிட்ரோ' நிறுவனம் தெரிவித்துள்ளது.


உலக சந்தையில் எரிவாயுவின் விலை உயர்வினால் இலங்கையின் எரிவாயு நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

12.5 கிலோ எடையுள்ள ஒரு எரிவாயு சிலிண்டரினால் தற்போது லிட்ரோ நிறுவனத்திற்கு சுமார் 2000 ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக லிட்ரோ விளம்பரத்துறை அதிகாரிகள் குழு அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தது.


எவ்வாறாயினும், விலை அதிகரிப்பால் நுகர்வோருக்கு ஏற்படும் அசௌகரியத்தை கருத்தில் கொண்டு புத்தாண்டு வரை லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலையை அதிகரிக்க வேண்டாம் என கோரிக்கையை முன்வைத்து நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் தற்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக நிறுவனத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.


எவ்வாறாயினும், Laughfs Gas நிறுவனம் 12.5 கிலோகிராம் எடை கொண்ட எரிவாயு சிலிண்டரின் விலையை 4230 ரூபாவாக அதிகரித்துள்ளது.


சந்தையில் லாஃப்ஸ் எரிவாயுவிற்கு கடும் தட்டுப்பாடு நிலவுகின்ற போதிலும், லாஃப்ஸ் நிறுவனம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை கூட சந்தைக்கு வெளியிடுவதில்லை என லிட்ரோ தெரிவித்துள்ளது.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

இலங்கையில் எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்வடைந்துள்ளது.

எரிபொருளை  பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருந்த நிலையில் இன்றும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


சிறிலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழுவின அமைப்பு தொடர்பில் ரட்டே ராலவுக்கு அவ்வளவு தெளிவில்லை. இருப்பினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் தொடக்கம் முதன் நிலை தலைவர்கள் அதில் இருப்பார்கள்.

நேற்று இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே ஒரு பில்லியன் டொலர் கடன் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது. எமது நாட்டுக்கு அத்தியாவசியமாக இருக்கக்கூடிய உணவு மற்றும் மருந்துப் பொருட்களை இந்தியா வழங்கிய கடனிலிருந்து நிபந்தனையோடு பெற்றுக் கொள்வதாகும்.

இலங்கையில் ஒரு கிலோ அரிசி விலை 200 ரூபாயைத் தாண்டிவிட்டது. பெட்ரோல், டீசல் விலை 250 ரூபாயைக் கடந்துவிட்டது. ஒரு முட்டை 35 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 90 சதவிகிதம் அளவுக்குக் ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன.


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் எதிர்வரும் 23ஆம் திகதி சர்வகட்சிக்குழு மாநாடு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ள நிலையில் அதில் பங்கேற்பது குறித்தும் பிரதான கட்சிகள் பலவும் தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றன.


“வடக்கு மக்களை நாம் மறக்கவும் மாட்டோம் கைவிடவும்மாட்டோம்.” என யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.யாழ்ப்பாண விசேட பொருளாதார மத்தியநிலையத்தை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு கூறினார். 


இன்று (20) பிற்பகல் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் நின்ற ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
கடவத்தையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் பெறுவதற்காக வரிசையில் நின்ற 70 வயதான முச்சக்கர வண்டி சாரதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உணவகங்களில் பால் தேநீர் விநியோகமும் இடைநிறுத்தப்பட உள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

ரட்டே ரால  தொடர்ச்சியாக அரசாங்கத்தினுடைய உட்பூசல் தொடர்பில் கதைத்து வந்தார்.மீண்டும் கதைக்குமளவுக்கு  உண்மையில் ஒன்று சேர்ந்த காரணங்கள்  உள்ளன.

பல தசாப்தங்களாக சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள மலையகத் மக்களின் மீது அதிக கவனம் செலுத்துமாறு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும்படி, இலங்கை மீது செல்வாக்கு செலுத்த சர்வதேச நாடுகளிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி கோரிக்கைகளை முன்வைக்க ஆரம்பித்துள்ளது.


இலங்கையின் பொருளாதார ஸ்தீரத்தன்மை மற்றும் கடன்களில் இருந்து மீள்வதற்கு நம்பகமான மற்றும் பொருத்தமான மூலோபாயத்தை செயற்படுத்துவதற்காக இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க சர்வதேச நாணய நிதியம் தயாராகவுள்ளது என சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஜெர்ரி ரைஸ் தெரிவித்துள்ளார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி