ஜெனீவாவிலுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது அமர்வு, இன்று (28) ஆரம்பமாகவுள்ளது. இந்த அமர்வின் நிகழ்ச்சி நிரலில் இலங்கை தொடர்பிலான விவாதம் மார்ச் மாதம் 3ஆம் திகதியன்று இடம்பெறவுள்ளது.

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் இதனை சமாளிக்க வேலை நாட்களை வாரத்திற்கு  நான்காக குறைத்து, மணிநேரத்தை அதிகரிக்க மத்திய வங்கி யோசனை முன்வைத்துள்ளது. 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணயின் 2022ம் ஆண்டுக்குரிய வருடாந்த தேசிய மாநாடு முல்லைத்தீவில் 20.02.2022அன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் நடைபெற்றது.

எதிர்வரும் ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு மூன்று வருடங்கள் நிறைவு பெறுகின்ற போதிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நீதி நிலைநாட்டப்படுமா என்பதற்கான சாத்தியமே தென்படாத நிலையே காணப்படுவதாக “ரட்டே ரால” அமைப்பு தெரிவித்துள்ளது.

ரஞ்சனின் விடுதலைக்காக ஜெனீவா செல்லும் இரண்டு சகாக்கள்!ரஞ்சன் ராமநாயக்கவின் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்காக  ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் 2022 பெப்ரவரி 28 திங்கட்கிழமை ஜெனீவா செல்லவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்  ஹரீன் பெர்னாண்டோ  இன்று தெரிவித்துள்ளார்.



உலகின் பலமிக்க இராணுவ படைகளில் ஒன்றான ரஷ்ய படைகள் உக்ரைனை ஆக்ரோ‌ஷமாக தாக்கி வரும் நிலையில் தம்மை போருக்கு தூண்டி நாடுகள் மௌனம் காப்பதையிட்டு உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி வேதனை வெளியிட்டிருந்தார்.

அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிரான லஞ்ச ஊழல் தொடர்பான வழக்கினை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்வதற்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழு தீர்மானித்துள்ளது.


கொரோனாவின் பின்னர் மீண்டுவரும் உலக நாடுகளின் புதிய கவலையாக உக்ரைன் -ரஷ்யா மோதல்கள் உள்ளன.
தனித்து போராடிவரும் உக்ரைன், உலகின் பலம் மிக்க இராணுவங்கள் வேடிக்கை பார்க்க தாம் தனித்து போராடிவருவதாக சாடியுள்ளார்.
இந்நிலையில் உக்ரைன் ஆக்கிரமிப்பை தடுத்தால் அணு ஆயுதத்தை ரஷ்யா கையில் எடுக்கும் என்கிற வகையில் ரஷ்ய ஜனாதிபதி புடின் மறைமுகமாக மிரட்டியுள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதலுக்கு நீதியை நிலைநாட்ட சர்வதேசத்தின் உதவியை நாடுவதைத் தவிர மாற்று வழியில்லையென இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை தெரிவித்துள்ளது.

கடந்த கால மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை செயற்படுத்துவதில் இலங்கை அசமந்தப்போக்கை கடைப்பிடிப்பதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் விசனம் வெளியிட்டுள்ளார்.

'ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டோரை உதாசீனம் செய்து விசாரணையாளர்களை கைது செய்யும் அரசியலை நிராகரிப்போம்.' என, ரெடிக்கல் நிலையம் மக்களை வலியுறுத்துகிறது.

பாராளுமன்றத்திற்குள் டோர்ச் லைட்டை கொண்டு வந்தமை தொடர்பில் தமக்கு எதிராக நடத்தப்படும் விசாரணைக்கு முகங்கொடுக்க தயார் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ சபையில் தெரிவித்துள்ளார்.நாட்டில் அமுல்படுத்தப்படும் மின்வெட்டுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் டோர்ச் லைட்டுகளுடன் நேற்று சபையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து மோதல்கள் தீவிரமடைந்தால் இலங்கையின் சுற்றுலாத்துறை மீண்டும் வீழ்ச்சியடையக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரிய மனி புதைகுழி தொடர்பான விசாரணைகள் மூன்று வருடங்களாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், அதனை மீண்டும் ஆரம்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


வடக்கில் 70 வீதமான நிலங்களை மகாவலி அதிகார சபையின் ஊடாகவும், வன இலாகா திணைக்களத்தின் ஊடாகவும் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் ஊடாகவும், தொல்பொருள் திணைக்களத்தின் ஊடாகவும் அபகரித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பியான சார்ள்ஸ் நிர்மலநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி