மாபியாக்களால் திண்டாடும் மக்கள் - 4,000 எரிவாயு சிலிண்டர்கள் சிக்கின
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி, நாட்டுமக்களின் இயல்பு வாழ்க்கையை வெகுவாக பாதித்துள்ளது.
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி, நாட்டுமக்களின் இயல்பு வாழ்க்கையை வெகுவாக பாதித்துள்ளது.
உடன் நடைமுறைக்கு வரும் வகையில் டீசலை கேன்களில் நிரப்புவதை நிறுத்துமாறு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு எதிராக, சஜித் பிரேமதாச தலைமையில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்ட பாரிய போராட்டம் இன்று(15) பிற்பகல் 2 மணிக்கு கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டது.
இலங்கை மக்கள் இனி இல்லாதா பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ள நிலையில், சமூக ஊடகங்களிலும் பொது வெளிகளிலும் மக்கள் போராட்டங்களும் எதிர்ப்புகளும் வலுவடைந்துள்ளன.
நிதி அமைச்சர் பெசிலை நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும். இந்த கருத்தை ஏற்படுத்தியவர் விமல் வீரவங்ச. பார்க்கின்ற சந்தர்ப்பத்தில் அது ஒரு ஊக்குவிக்கின்ற ஒரு கருத்தாகும். இந்த கருத்துடன் இன்னுமொரு காரணம் பின்னிப்பிணைந்து காணப்படுகின்றது. இலங்கையினுடைய அரசியலில் ராஜபக்சக்களுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமா என்றே. யாராவது கேட்டால் தற்போது இந்த நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் குறிப்பிடுவது அவ்வாறான சந்தர்ப்பத்தில் இல்லை என்று.
இலங்கை எதிர்கொண்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டுவரும் நோக்கில் சர்வதேச நாணய நிதியத்திடம் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளது.
பசிலின் இயலாமையை மறைத்து எம்மை குற்றம் சுமத்த வேண்டாம் என முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில கேட்டுக்கொண்டார்.
“ஒரு குறிப்பிட்ட அளவு அந்நிய செலாவணியை சரியாக நிர்வகிக்க நிதி அமைச்சர் தவறியதால் நாட்டில் டொலர் பற்றாக்குறை ஏற்பட்டது. எனவே, பசிலின் வேலை செய்ய முடியாத நிலையை மறைத்து எம்மீது குற்றம் சுமத்த வேண்டாம் என அரசாங்கத்தை கேட்டுக் கொள்கின்றோம்.” என அவர் கூறினார்.
இலங்கையில் மோசமான பொருளாதார நெருக்கடி நிலவிவரும் நிலையில் லெபனான் எதிர்நோக்கிய சிக்கல்களை போன்று இலங்கையும் எதிர் கொள்ளும் என சிரேஷ்ட நிதியியல் ஊடகவியலாளர் ஷிஹார் அனீஸ் எதிர்வு கூறியுள்ளார்.
புதிய பஸ் கட்டண அதிகரிப்புக்கு அமைய, 17 ரூபாவாக காணப்பட்ட ஆகக்குறைந்த பஸ் கட்டணம், 20 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி நிலையில் டீசல் விலையை அதிகரித்தாலும் ஒரு லீற்றர் டீசலுக்கு 120 ரூபா நஷ்டத்தை சுமக்க வேண்டியுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
உக்ரேன்- ரஷ்யா யுத்தம் ஆரம்பித்து தற்போது மூன்று வாரங்கள் அண்மித்துள்ளது. தற்போதும் யுத்தம் நடைபெறுகிறது. உயிரனு ஆயுதங்கள், இரசாயன ஆயுதங்கள் தொடர்பில் கலந்துரையாடல் நடைபெறுகின்றது. உண்மையில் யுத்தத்தினிடையே இருப்பது குரோதம். குரோதம் இருக்கக்கூடிய யுத்தமானது எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நியாயத்தை உண்டுபண்ணாது. உக்ரேன் உயிர் அணு ஆயுதங்களை தயாரிப்பதாக ரஸ்யா ஐக்கிய நாடுகள் சபைக்கு முறைப்பாடு ஒன்றை முன்வைத்துள்ளது.
நாட்டில் சடுதியாக டொலரின் பெருமதி 50 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டதன் தாக்கம், நாட்டின் அனைத்து அத்தியாவசிய பொருட்கள் மீதும் ஆதிக்கம் செலுத்துகின்றது.
"தேசிய அரசு என்பதற்கு அப்பால், இணக்கப்பாட்டுடனான தேசிய வேலைத்திட்டமொன்றே தற்போது அவசியம் என முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இலங்கையில் நாளுக்கு நாள் பொருட்களின் விலையில் ஏற்படுத்தப்பட்டுவரும் பாரிய அதிகரிப்பு நாட்டு மக்களின் கழுத்தை நெருக்கும் நிலையை எட்டியுள்ளது.
எரிபொருள் விலையுடன், நாட்டின் போக்குவரத்துக் கட்டணம் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மற்றும் பேக்கரி பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் இதுவரை நியமிக்கப்பட்டுள்ள பொதுப்பணித்துறை ஆணைக்குழுக்கள் பெண்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்காத காரணத்தினால், பெண்களே இணைந்து மகளிர் ஆணைக்குழு ஒன்றை உருவாக்கியுள்ளனர்.