ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷ ஆட்சியின் ஒரு வருடத்திற்குப் பிறகு சிலர் இதை 'தோல்வி' என்று அழைத்தாலும்,உண்மையாக என்ன நடந்தது இது அவரை ஆட்சிக்கு கொண்டுவந்த சித்தாந்தத்தின் தோல்வி என்று முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி பொதுஜன பெரமுனவின் முக்கிய பங்காளியாகும் இப்போது கூட்டணியை விட்டு வெளியேறி தனியாக செயற்பட அவர்கள் உள்ளக கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதை 'திவயின இரிதா' செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸால் இறந்த இலங்கை முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமரதுங்க .சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்றை  வெளியிட்டு அரசாங்கத்திடம் இந்த  கோரிக்கையை விடுத்துள்ளார்.

கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான இந்திய விவசாயிகளின் மாபெரும் போராட்டம் பெரும் வெற்றியை நோக்கி நகர்கின்றது  மோடியோ,அமித்சாவோ Popular Politicions அல்ல வெறும் ஊடக விம்பங்களே மோடியாலோ,அமித்சாவாலோ மக்களிடம் செல்வாக்கு செலுத்த இயலாத நிலையில், ​பொலிஸ் லத்தி மூலம் மக்களை அடக்கி விடலாம் என கார்ப்பரேட்டுகள் நினைப்பது வெறும் பகல் கனவே. .

சர்வதேச விமான நிலையத்தை மூடுவது தொடர்பில் அரசாங்கத்திற்கு எவ்வித தீர்மானமும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.யாழ். சர்வதேச விமான நிலையம் தொடர்பில் ஊடகங்களில் வெளியான கருத்துக்கள் குறித்தி கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

முஸ்லீம் மக்களிற்கு தங்கள் மத கொள்கைகள் அடிப்படையில் உடல்களை அகற்றுவதற்கு உள்ள உரிமையை மறுப்பது, அடிப்படை உரிமையை மறுக்கும் செயல் என தமிழ்தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.தமிழ்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ளார்.

இந்திய இலங்கை உடன்படிக்கையின் கீழ் மூன்று முக்கிய விடயங்களை இந்தியா நிறைவேற்றவில்லை என அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.அம்பாறையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எங்கள் மக்கள் சக்தி கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு அத்துரலிய ரத்தன தேரர் பெயரிடப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் நேற்றைய கூட்டத்தின் போது இவரின் பெயர் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.

கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் ஏறத்தாழ முழுக்க வெளியாகி விட்டன. அங்கு ஆளும் இடதுசாரிகள் அலை வீசி விட்டது. அந்த சூறாவளியில் சிக்கி, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க கூட்டணி வீசப்பட்டுள்ளது.

11 பேர் கொல்லப்பட்டு மற்றும் 100ற்கும் மேற்பட்டோர் காயமடைந்த மஹர சிறை படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகளை அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் என விமர்சிக்கப்பட்டுள்ளனர். சட்டமா அதிபர் திணைக்களம் இந்த விமர்சனத்தை வெளியிட்டுள்ளது.

கொரோனா நோய்த் தொற்றால் மரணித்த முஸ்லிம் மக்களினது சடலங்களை அவர்களது மத நம்பிக்கைகளை உதாசீனம் செய்து கட்டாயத் தகனம் செய்வதும், நாட்டுக்கு வெளியே ஆளரவமற்ற தீவொன்றில் அவர்களது சடலங்களைப் புதைப்பது தொடர்பாக ஆராய்வதும் முஸ்லிம் மக்கள் மீதான இலங்கை அரசாங்கத்தின் பௌத்த, சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறையே தவிர சுகாதார நடைமுறை அல்ல என்று தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த 65 வயது சீக்கிய மதகுரு சந்த் பாபா ராம் சிங் புதன்கிழமை மாலை தற்கொலை செய்துகொண்டார் என்று கூறப்படுகிறது. ஹரியாணா மாநிலம், கர்னால் அருகே உள்ள சிங்காரா கிராமத்தை சேர்ந்தவர் இவர்.

இலங்கையில் கொரோனா வைரசினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை மாலைதீவில் அடக்கம் செய்ய அனுமதிப்பது குறித்து மாலைதீவு அரசாங்கம் தெரிவித்திருப்பதற்கு ஐக்கியநாடுகள் மனித உரிமை நிபுணர் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
மதநம்பிக்கைகள் குறித்த ஐக்கியநாடுகளின் விசேட அறிக்கையாளர் அஹ்மெட் சஹீட் இதனை தெரிவித்துள்ளார்.

நிலையான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாரிய வீழ்ச்சியை நோக்கி இலங்கை நகர்ந்துள்ளதை இலங்கை தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி