அடக்கம் செய்யும் உரிமையை அரசு எப்படி மறுக்க முடியும்! ரவூப் ஹக்கீம்
கொவிட் - 19 தொற்றுக்குள்ளான ஜனாசாக்களை நல்லடக்கம் செய்ய முன்வந்துள்ள மாலைதீவு அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்கும் அதேவேளையில், அதனைச் சாதகமாகப் பயன்படுத்தி இலங்கையிலேயே வாழ்ந்து மரணித்த பின்னர் இங்கு நல்லடக்கம் செய்யப்படுவதற்கு எங்களுக்குள்ள அடிப்படை உரிமையை மறுப்பதற்கு இந்நாட்டு அரசாங்கம் மேற்கொள்ளும் எல்லாவிதமான முயற்சிகளையும் எதிர்த்து நிற்போம்.