வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற யுத்தத்தின் போதும் அதற்கு பின்னரான நடவடிக்கைகளின்

போதும், தமிழீழ விடுதலைப் புலிகளின் முகாம்கள், சட்டவிரோத வங்கிகள் மற்றும் பிற கட்டிடங்களில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பாதுகாப்பில் உள்ளன தங்க நகைகள் உள்ளிட்ட ஆபரணப் பொருட்களை, தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகா ரசபையை பரிசோதனைக்கு அனுப்பி அறிக்கை கோருமாறு, கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (05) உத்தரவிட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சார்பில், பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த பின்னர், கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

பிரதி சொலிசிட்டர் ஜெனரல் முன்வைத்த விடயங்களைக் கருத்திற்கொண்ட நீதவான், இந்த விசாரணைகளுக்குக் கோரப்பட்ட வேறு பல உத்தரவுகளைப் பிறப்பித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி