கொரோனா தொற்று காரணமாக இறந்த முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான தடையை எதிர்த்து இன்று (13) மாலை 5.00 மணிக்கு அரசுக்கு எதிராக பொரெல்ல கனத்தை மைதானத்திற்கு முன் அமைதியான போராட்டம் இடம் பெற்றுள்ளது.

கொவிட் தொற்றுநோயால் இறந்த 20 நாள் குழந்தையை அவரது பெற்றோரிடம் கூட காட்டாமல் தகனம் செய்ததை எதிர்த்து இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கொவிட் வைரசில் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கான நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றவும், கல்லறை வாயிலில் ஒரு வெள்ளை நாடாவைக் கட்டவும், அமைதியான போராட்டத்திற்கு வரவும் என பங்கேற்பவர்கள் அனைவரையும் அமைப்பாளர்கள் கேட்டுக்கொண்டனர்.

லண்டனிலும் போராட்டங்கள்

இலங்கையில் கொவிட் தொற்றுநோயால் இறந்த முஸ்லிம்களின் உடல்களை வலுக்கட்டாயமாக தகனம் செய்வதை எதிர்த்து லண்டனில் வசிக்கும் இலங்கையர் குழு ஒன்று அமைதியான போராட்டம் ஒனறை நடத்தியது.

இந்த போராட்டம் நேற்று (டிசம்பர் 12) லண்டனில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயம் முன்னிலையில் நடைபெற்றது, மேலும் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களின்படி அடக்கம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும், உலகெங்கிலும் ஏராளமான நாடுகள் கொவிட் தொற்றுநோயால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

உலக நாடுகள் இப்படி நடக்கையில் , இலங்கை அதிகாரிகள் ஐ.நா. வின் வழிகாட்டுதல்களை நிராகரிக்கின்றனர்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி