நான் இராஜினாமா செய்துள்ளதாக வெளியாகும் செய்தி உண்மை இல்லை! அலி சப்ரி
நான் அமைச்சர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக வெளியாகும் தகவலில் எவ்வித உண்மையும் இல்லையென நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
நான் அமைச்சர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக வெளியாகும் தகவலில் எவ்வித உண்மையும் இல்லையென நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
கல்முனையில் கொரோனா நிலைமை மோசமாகிவருகிறது. எனவே தொற்று கூடுதலாக இனங்காணப்பட்ட பகுதிகள் அடங்கலாக கல்முனை மாநகரை முற்றாக முடக்கி மக்களைக் காப்பாற்றுமாறு கோரும் மகஜரை கல்முனை மாநகரசபை மேயர் சட்டத்தரணி எ.எம்.றக்கீப் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப்பணிப்பாளர் டொக்டர் கு. சுகுணன் கல்முனை பிரதான பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி கே.எச். சுஜித்பியந்த ஆகியோரைச் சந்தித்த பொதுமக்கள் பிரதிநிதிகள் கையளித்து வேண்டுகோள் விடுத்தனர்.
ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷ மக்கள் கட்டளைப்படி நாட்டை ஆட்சி செய்ய வேண்டும், ஆனால் அனுராதபுரத்தில் உள்ள ஞான அக்காவின் விருப்பப்படி அல்ல, என்கிறார் 'சிங்கள' தலைவரான மடில்லே பன்லோக தேரர்மகாசங்கம் இன்று வீதிகளில் இறங்க வேண்டியிருப்பது குறித்து தற்போதைய அரசாங்கமும் ஜனாதிபதியும் வெட்கப்பட வேண்டும் என்று கூறிய அவர், மகா சங்கம் வீதிகளில் இறங்க வேண்டியிருந்தது என்பது அரசாங்கம் தோல்வியுற்றது என்பதற்கு சிறந்த சான்று என்றும் கூறினார்.
குறுகிய கடல் மீன்பிடித்தல் தொடர்பான பல தசாப்தங்களாக ஏற்பட்ட சர்ச்சைக்கு அரசாங்கங்கள் நிரந்தர தீர்வைக்பெற்றுக் கொ டுக்காமையினால் இப்பிரச்சினையைத்தீர்ப்பதற்காக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே நேருக்கு நேர் கலந்துரையாடலுக்கு இரு நாட்டு மீனவர்களும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
ஜனநாயக உரிமைகளை வென்றெடுக்க தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று வடக்கில் உள்ள ஒரு தமிழ் தேசியவாத கட்சியின் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய உரிமை கோரி வடக்கில் நடைபெற்ற போராட்டத்தின் போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் (டி.என்.பி.எஃப்) பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார்
கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் இறுதிச் சடங்குகள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பதில் அரசாங்கத்தின் கடுமையான நிலைப்பாடு பௌத்த பிக்குகளிடையே பிளவிற்கு வழிவகுத்துள்ளது.தகனம் செய்வதற்கு எவ்வித அறிவியல் அடிப்படையும் இல்லாததால், வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்களை அடக்கம் செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு துறவிகளை உள்ளடக்கிய சர்வமத குழு ஒன்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்து இரண்டு தினங்கள் கடந்துள்ள நிலையில், கொரோனா வைரஸ் தொற்று உடல்கள் அனைத்தையுமம் எரியூட்டுமாறு கோரி, பல தேசியவாத பௌத்த அமைப்புகள் ஜனாதிபதி செயலகம் முன்பாக போராட்டத்தை நடத்தியுள்ளன.
இந்த ஆண்டு தொடக்கத்தில் கம்பஹாவின் யக்கல பகுதியில் உள்ள பெரிய அளவிலான தேங்காய் எண்ணெய் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து உளவுத்துறை சிறப்பு விசாரணை நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.தொழிற்சாலை தீப்பிடித்ததாகவும், ஒரு தனியார் காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து ரூ 750 இலட்சம் அதிகமான தொகை பெறப்பட்டதாகவும் வந்த புகாரின் பேரில் சிறப்பு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஜனாஸா எரிப்புக்கு எதிராக எட்டு வயது சிறுவன் நுஹ்மானும் அவரது தந்தையும் கவனயீர்ப்பு நடைபாதை ஒன்றினை கல்முனையில் இருந்து அக்கரைப்பற்று வரை இன்று திங்கட்கிழமை ஆரம்பித்தனர்.
ஜனாஸா தகனம் செய்யும் விடயத்தில் முஸ்லிம் மக்களுடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நிற்கும் என்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்புக்கு எதிராக, வவுனியாவில் நேற்று இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதுமுள்ள திரையரங்குகள் வரையறுக்கப்பட்ட ஆசனங்களுடன் ஜனவரி முதலாம் திகதி முதல் திறக்கப்படும் என திரைப்படக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
பொதுஜனபெரமுன ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சமர்ப்பிக்கும் வேட்பாளர்களிற்கு போட்டியிடுவதற்கு இடமளிக்காத பட்சத்தில் மாகாணசபை தேர்தல்களில் கட்சி தனித்து போட்டியிடவேண்டியிருக்கும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்திற்கு எதிராக சதி செய்வதைப் போல உணர்கிறேன் என்று இராஜங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.2015 ஆம் ஆண்டில் ஒரு முக்கியமான கட்டத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்திற்கு எதிராக செயல்பட்டதா என்று சந்தேகிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
கொத்தமல்லி என்று கூறி உக்ரைனில் இருந்து 28 விவசாயக் கழிவுகள் அடங்கிய கொள்கலன்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.இதன் பின்னால் ஒரு பிரபலமான ஒருவரின் மகன் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக lankatruth.com தெரிவித்துள்ளது.
பசில் ராஜபக்ஷவின் அழுத்தத்தின் கீழ் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பல பௌத்த துறவிகள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதாக அரச உள் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் பார் அசோசியேஷன் தேர்தலுக்காக டிசம்பர் 18 அன்று ராணுவ தலைமையகத்தில் நடைபெற்ற தேர்தல் கூட்டத்தைத் தொடர்ந்து, இலங்கை ராணுவ நீதிபதி மற்றும் வழக்கறிஞர்கள் அவர்களது அலுவலகத்தில் உள்ள மற்ற அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.