திருகோணமலை நகரில் சிவன் கோயிலின் முன்றலில் இம்மாதம் 15ஆம் திகதி முதல் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் 

உறவினர்களின் உணவுத் தவிர்ப்புத் போராட்டமானது, இன்று (21) 7ஆவது நாளை எட்டியுள்ளது. 

இந்நிலையில் இந்த உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் பங்குபற்றிய இருவர் சுகவீனம் அடைந்துள்ளனர். கடந்த 7 நாட்களில் 10 நபர்கள் இருக்கும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில், இருவருக்கு மயக்க நிலை, உடல் சோர்வு, களைப்பு போன்ற சுகவீனங்களை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

இருப்பினும் நாங்கள் இறந்தாலும் எமக்கான நீதி சர்வதேச ரீதியாக கிடைக்கும் வரை தான் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை தொடரப் போவதாக போராட்டத்தில் சுகவீனம் உற்ற இருவரும் தெரிவித்தனர். 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி