கடந்த (ஏப்ரல் 7) ம் திகதி தொழிலாளர் போராட்டத்தின் போது பொலிசாரால் கைது செய்யப்பட்ட சுதந்திர ஊடகவியலாளர் மனிதாபிமானமற்ற முறையில் தாக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை அளிக்காமைக்கு எதிராக மருதானை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

ஏப்ரல் 7 கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு முன்னால் சுகாதார ஊழியர்கள் நடத்திய போராட்டத்தின் போது செய்தி சேகரிக்கச்சென்றமைக்காக சுதந்திர  ஊடகவியலாளர் மலிக அபேகோ​ன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

11 கோரிக்கைகளை முன்வைத்து ஐக்கிய சுகாதாரத் தொழிலாளர் சங்கத்தால் இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தற்போது மருதானை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலிக அபேகோன் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தும்  அதற்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

தொழிற்சங்க ஆர்வலர்களும் மற்றும் வழக்கறிஞர் ஒருவரும் நேற்று இரவு மருதானை பொலிஸ் நிலையத்திற்குச் மலிகவை சந்திக்க சென்றிருந்தபோதிலும், அவரை சந்திக்க பொலிசார் அனுமதிக்கவில்லை.

maradana police cruelty protest

maradana swc protest

இதேபோல், பொலிஸ் காவலில் உள்ள ஒரு நபரின் உரிமைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு வழக்கறிஞரை அவ்வாறு சந்திக்க மருதானை பொலிஸ் OIC மறுத்துவிட்டார்.

தற்போதைய கோதபய ராஜபக்ஷ ஆட்சி தொழிலாளர்களின் உரிமைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தி ஜனநாயக உரிமைகளை புறக்கணிக்கும் அடக்குமுறை ஆட்சியை நோக்கி நகர்கிறது என்று எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.

காவல்துறையினர் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துள்ளனர் மற்றும் பல சந்தர்ப்பங்களில் மக்களை நசுக்கி, அவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர், இந்த நிலைமையை உடனடியாக அம்பலப்படுத்தி அதற்கு எதிராக மக்கள் சக்தியை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை போராட்டத்தில் பங்கு பற்றியவர்கள் தெரிவித்துள்ளனர்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி