தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவர்கள் மீது அமெரிக்க மிஷன் திருச்சபையை சேர்ந்தவர்கள் என அடையாளப்படுத்தப்படும் நபர்கள் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

கல்லூரியின் அதிபர் விடுதி மற்றும் அது அமைந்துள்ள காணி யாருக்கு சொந்தம் என கல்லூரி நிர்வாகத்திற்கும் அமெரிக்க மிஷனுக்கும் இடையில் பிரச்சினை நிலவி வருகின்றன.

மாணவர்கள் துவிச்சக்கரவண்டிகளை நிறுத்தும் இடம் தமக்கு சொந்தமானது எனவும் அதில் துவிச்சக்கரவண்டிகளை நிறுத்தவேண்டாம் எனக்கூறி மாணவர்கள் தாக்கப்பட்டனர்.

கடந்த சில மாதங்களாக இந்தக் காணிப் பிரச்சினை நடைபெற்று, தற்போது அந்த நிலம் கல்லூரிக்கு சொந்தமானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. 

அத்துடன் அமெரிக்க மிஷனின் அத்துமீறல்கள் தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) கல்லூரி மாணவர்கள் துவிச்சக்கர வண்டிகளை நிறுத்தும் இடம் தமது சபைக்கு சொந்தமான காணி எனவும் அங்கு துவிச்சக்கர வண்டிகளை நிறுத்த வேண்டாம் என கூறி மாணவர்களுடன் முரண்பட்டு மாணவர்கள் மீது தாக்குதல்களையும் மேற்கொண்டுள்ளனர்.

இதில் சில மாணவர்கள் காயமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கல்லூரி அதிபரினால் தெல்லிப்பழை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து கல்லூரிக்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர்.

முறைப்பாட்டின் பிரகாரம் மாணவர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் தாக்குதலாளிகளை கைது செய்வதற்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி