பல்வேறு மாநிலங்களில் ஒக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஒக்சிஜன் தட்டுப்பாடு நிலவுவதை கருத்திற் கொண்டு தமிழகத்தின் தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை ஒக்சிஜன் தயாரிப்புப் பணிக்காக மட்டும் இயக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டால் பிரபாகரனின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை விட கொழும்பு துறைமுக நகரத்திற்கு அதிக அதிகாரங்கள் இருக்கும் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தனது பயணத்தைத் தடுத்து நிறுத்துபவர்களுக்கு உடனடியாக கட்சியை விட்டு வெளியேறுமாறு சமகி ஜன பலவேகய சஜித் பிரேமதாச அறிவுறுத்தியுள்ளார். கடந்த காலத்தைப் போலவே தனது வேலையில் யாரையும் தலையிட அனுமதிக்க மாட்டேன் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.

மொட்டு கட்சியின் தேசிய அமைப்பாளராகவும், நாட்டின் அதிகாரபூர்வமற்ற ஜனாதிபதியாகவும் கருதப்படும் பசில் ராஜபக்ஷவின் 70 வது பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 27). அவர் ஏப்ரல் 27, 1951 இல் பிறந்தார்.

இணையத்தளத்தின் ஊடாக விளம்பரமொன்றை வெளியிட்டு, இந்திய பிரஜைகளை இலங்கையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி, வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கும் வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன கூறியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் எண்ணெய் உற்பத்தியில் இரண்டாவது நாடாக விளங்கும் சவுதி அரேபியா, அதன் உள்நாட்டு எண்ணெய் நுகர்வினை குறைக்க திட்டமிட்டுள்ளது.

கொரோனா இரண்டாம் அலை பரவும் இந்த சூழலில் வீடுகளிலும் மாஸ்க் அணிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது என பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியை இராஜினாமா செய்யுமாறு ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்துகின்றது.

பெண்களைப் பலியெடுக்கும் நுண் கடனை நிறுத்தக்கோரி சுதந்திரத்திற்கான பெண்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாயில் பல இலட்சம் கையெழுத்துக்களை சேகரிக்கும் பணிகள் இடம்பெற்றுள்ளன.

நுவரெலியா இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இராகலை மத்திய பிரிவில் 16 வீடுகளைக்கொண்ட தொடர்குடியிருப்பில் நேற்று இரவில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன.

கொவிட் -19 தொற்றுநோய்க்கு தடுப்பூசி மட்டுமே தீர்வாகும் இந்த சவாலை சமாளிக்க சுகாதார அதிகாரிகள் பரிந்துரைத்த அனைத்து விதிகளையும் மக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் கொவிட் தொற்றுநோயின் முதல் அலையை கட்டுப்படுத்தியது இப்போதும் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

93-வது ஒஸ்கார் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது.உலக அளவில் சினிமாத்துறையில் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டு தோறும் ஒஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. சினிமா துறையின் உச்சபட்ட விருதான ஒஸ்காரை பெறுவதில் உலகின் பல்வேறு சினிமா பிரபலங்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று (25) முதல் எதிர்வரும் இரண்டு வாரகாலப் பகுதியில் நடைபெற ஏற்பாடாகியிருந்த அனைத்து அரச விழாக்களையும் நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

றிசாத்தின் கைதுக்கு எதிராக பேச அவரது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தைரியம் உள்ளதா? என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் கேள்வி எழுப்பினார். இன்று(25) கொழும்பிலுள்ள ஊடகங்களிடம்  கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

திட்டமிட்டபடி மக்கள் விடுதலை முன்னணியின் மேதினக் கூட்டம் இடம்பெறும் என மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி