அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனை விடுவிப்பதில், ஐக்கிய மக்கள் சக்தி தீவிர கரிசனை காட்ட வேண்டுமென மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னால் பிரதியமைச்சருமான அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.

கிண்ணியாவில் உள்ள அவரது இல்லத்தில் மக்கள் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்களின் பங்கேற்புடன் நேற்று (03) மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், ரிஷாட்டின் கைது இந்த நாட்டில் வாழ்கின்ற எமக்கு மட்டுமல்ல உலக முஸ்லிம் சமூகத்தினரையும் களங்கப்படுத்தியுள்ளது.

“பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை கைது செய்வதாக இருந்தால் சபாநாயகர் நீதிமன்றத்துக்கு அறிவிக்க வேண்டும். எனினும், புனித ரமழான் காலத்தில் நடுநிசியில் கைதாவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

“ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் இது விடயத்தில் கவனம் எடுத்து அவரை விடுதலை செய்ய வேண்டும். குற்றங்கள் ஏதும் இருப்பின், நீதிமன்றத்துக்கு முன் நிறுத்துங்கள்.

“அவரையும் அவரது சகோதரரையும் ஜனாதிபதி ஆணைக்குழு பலமுறை விசாரணை செய்துள்ளது. அவர்களால் சாட்சியங்கள் வழங்கப்பட்டுள்ளன. எந்தவிதக் குற்றமுமற்றவர் என்றிருந்த போது, அநியாயக் கைது இடம்பெற்றுள்ளது.

“சிறுபான்மை சமூகம் நிம்மதியாக வாழ வேண்டும். எமது சமூகம் ஒரு போதும் பயங்கரவாதத்துக்கு துணை போனதும் கிடையாது. முஸ்லிம் சமூகத்தை பழிவாங்க நினைக்க வேண்டாம்” என்றார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி