வாக்குறுதிகளை நிறைவேற்ற இலங்கை அரசு முன்வர வேண்டும்! இல்லையேல் சர்வதேச அழுத்தங்கள் அதிகரிக்கும்! இரா.சம்பந்தன்
இலங்கைத் தமிழர்களை ஏமாற்றியதைப் போல் சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றலாம் என்று இலங்கை அரசு நினைத்தால் அது மிகப் பெரும் தவறு. இன்று சர்வதேச சமூகத்தை ஏமாற்ற முடியாத இக்கட்டான நிலையிலேயே இலங்கை அரசு உள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.