இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் கண் சத்திர சிகிச்சை அறையின் குளிரூட்டியில் எலியின் சடலம் இருந்ததால் சத்திரசிகிச்சை அறையில்
சகல சத்திர சிகிச்சைகளும் கடந்த 24ஆம் திகதி நிறுத்தப்பட்டதால், அன்றைய தினம் சத்திர சிகிச்சைக்காக வந்த நோயாளர்கள் வீடு திரும்பியுள்ளனர்.
கண் லென்ஸ் பொருத்துதல், கண்புரை அகற்றுதல் போன்ற அறுவை சிகிச்சைக்கு தேவையான பொருட்களை தனியார் மருந்துக் கடைகளில் வாங்கிக்கொண்டு, நோயாளிகள் கடந்த 24ம் திகதி வைத்தியசாலைக்குச் சென்றுள்ளனர்.
ஏர் கண்டிஷனரில் ஒரு எலி இறந்துவிட்டதாகவும், இயந்திரத்தின் காற்று நீரோட்டங்களால் அறுவை சிகிச்சை அறை முழுவதும் கிருமிகள் பரவியுள்ளதாகவும் அறுவை சிகிச்சை செய்து கொள்ளும் நோயாளிகளின் கண்கள் மற்றும் மூளைக்குள் கிருமிகள் நுழையக்கூடும் என்பதால், நாளை (31ஆம் திகதி) மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சைக்காக வருமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோயாளிகள் மற்றும் பணியாளர்களால் வீசப்படும் உணவு, மருத்துவக் கழிவுகள் போன்ற ஏராளமான குப்பைகள் தினசரி சேகரிக்கப்படுவதாகவும் இதனால், எலிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், இது மருத்துவமனையின் சிகிச்சை மற்றும் சேவைகளை கடுமையாக பாதிக்கிறது என்றும், வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.