வரவு செலவுத்திட்டம் தொடர்பான கூட்டங்கள் நடைபெற்ற காலத்தில் நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்காக சுமார் 80 கோடி ரூபாய் செலவாகியதாக நாடாளுமன்றத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிதியமைச்சர் பசில் ராஜபக்ச கடந்த நவம்பர் மாதம் 12 ஆம் திகதி வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பித்து உரையாற்றினார்.
நாடு முழுவதிலும் உள்ள மருந்துகளில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
இந்தியாவுக்குத் தேவையெனில் கூடுதலாக ரஃபேல் விமானங்களை அனுப்பத் தயார் என்று பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது.
இனியும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பதிவுசெய்யப்படாமல் இருக்கமுடியாது என்பதில் தமிழீழ விடுதலை இயக்கம் உறுதியாகவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
சீனாவை , சிங்கள மக்கள் ஆரம்பத்தில் பெரிது படுத்தவில்லை. பெரும் காலதாமதத்தின் பின் சிங்கள மக்கள் சீனா குறித்து விழிப்படைந்துள்ளனர். அவர்களது எதிர்ப்பு காரணமாக , இப்போது சிங்கள பகுதிகளை விட்டு சீனா பின்வாங்கி விட்டது. மலக்கழிவு உரக் கப்பல் பிரச்சனைதான் விசுவரூபம் எடுத்தது. இலங்கை வங்கியை பிளாக் லிஸ்ட் பண்ணப் போவதாக வெருட்டியது சீனா.
அதிபர் ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடர்பில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் ஜனவரி 22ஆம் திகதிக்கு முன்னர் நிறைவேற்றப்படாவிட்டால், மீண்டும் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
புத்தாண்டு நெருங்கி வரும் நிலையில் அமெரிக்காவின் உயர்மட்டக் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற விசேட சந்திப்பின் போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது.
ரத்துபஸ்வல சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று (16) கம்பஹா நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது.2013 ஒகஸ்ட 01ம் திகதி நடந்த இந்த சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இராணுவத்தின் முன்னாள் பிரிகேடியர் அருண தேசப்பிரிய குணவர்தன, கம்பஹா பிரதேச சபையின் உறுப்பினராக இருந்த நிலந்த பெரேரா உள்ளிட்ட பிரதிவாதிகள் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகயிருந்தனர்.
நாடாளுமன்ற சபை அமர்வுகள் கூடுவதற்கு முன்பதாக அமைச்சரவையில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கொழும்பு முன்னணி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வலிவடக்கு பிரதேசத்தின் பகுதியில் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக மழைக்கு மத்தியிலும் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
இலங்கைக்குத் தென்கிழக்காக காணப்பட்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது தெற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நிலை கொண்டுள்ளது.
அமைச்சரவையின் தலையீட்டின் மூலம் மாகாணசபை தேர்தல்களை ஒத்திவைக்க முடியாது என தேர்தல் ஆணையாளர் நிமால் ஜி புஞ்சிவேவ தெரிவித்துள்ளார்.
கொட்டும் மழையிலும் சுட்டெரிக்கும் வெயிலிலும் தனது உயிரையும் பொருட்படுத்தாது அட்டைக்கடிகள், குளவிக் கொட்டு , சிறுத்தை தாக்குதல் எனப் பல வலிகளையும் அச்சத்தையும் மனதில் சுமந்துக் கொண்டு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பாடுபடுபவர்கள் தான் எமது தேயிலை தோட்ட தொழிலாளர்கள்.
தென்கொரியாவின் மிகப்பெரிய பால் உற்பத்தி நிறுவனமாக 'சியோல் மில்க்’ செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தனது விற்பனையை அதிகரிக்கும் வகையில் சமீபத்தில் வெளியிட்ட விளம்பர வீடியோ உலக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.