அரசாங்கம் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்து நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்!
உர நெருக்கடியால் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி அரசானக்த்தை வலியுறுத்தியுள்ளது.
உர நெருக்கடியால் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி அரசானக்த்தை வலியுறுத்தியுள்ளது.
இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் `தேர்தல் சீர்திருத்த மசோதா' தாக்கல் செய்யப்பட்டுள்ளது. `வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது. தேர்தல் ஜனநாயகத்தையே காலி செய்யக் கூடிய அம்சமாகவும் இந்த மசோதா உள்ளது' என்கின்றனர் எதிர்க்கட்சி எம்.பிக்கள்.
கிழக்கு மாகாண ஆசிரியர்களின் வருடாந்த இடமாற்றம் அரசியல்வாதிகளின் விருப்பத்திற்கு அமையவே இடம்பெற்றுள்ளதாகவும் அவ் இடமாற்றம் சட்ட விரோதமானது என கிழக்கு மாகாண ஆசிரியர் சேவைகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
முல்லைத்தீவு மூங்கிலாறு கிராமத்தில் சட்ட விரோத கருக்கலைப்புக்கு முயற்சித்து கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு நீதி கோரி, கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப் பட்டுள்ளது.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பட்டதாரிகள் செயற்பட்ட விதம் முன்னுதாரணமானதும் சிறந்த சாதனையும் ஆகும் என தென் இலங்கையின் ராமண்ணா மஹா நிக்காயவின் தலைவர் கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
நம்பிக்கை, தன்னம்பிக்கை மற்றும் குழுமீதான நம்பிக்கை ஆகியவையே ஒரு தலைவரின் வெற்றியின் இதயம் என்று ஜனாதிபதி கூறுகிறார்
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இலங்கைக்கு சுத்திகரிப்புக்காக ஓடர் செய்யப்பட்ட கச்சா எண்ணெய் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் இந்த அபாயம் ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. பொதுவாக கச்சா எண்ணெயை ஓடர் செய்து இறக்குமதி செய்ய 90 நாட்கள் ஆகும்.
இலங்கையில் நிதி நெருக்கடி நிலவும் நேரத்தில் மத்திய வங்கியிடம் பணத்தை அச்சிடும் இயந்திரம் இருந்தாலும் நினைத்த நேரத்தில் பணத்தை அச்சிட்டு அரசாங்கத்திற்கு வழங்க முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் சபை உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி (Sunil Handunnetti) தெரிவித்துள்ளார்.
உலக வங்கியின் நிர்வாக இயக்குநர்கள் குழு பாகிஸ்தானுக்கு 19.5 கோடி டாலர் நிதியுதவி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.பாகிஸ்தானில் மின்சார விநியோகத்தை மேம்படுத்துவதற்கும், நுகர்வோருக்கான சேவைத் தரத்தை அதிகரிக்கவும் இந்த நிதி உதவி அளிக்கப்பட இருக்கிறது. அது மட்டுமின்றி எரிசக்தித் துறையில் சீர்திருத்தங்களை செயல்படுத்த இந்த நிதி உதவியை உலக வங்கி வழங்குகின்றது.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் வருடாந்த பட்டமளிப்பு விழாவில் பட்டதாரிகள் செயற்பட்ட விதம் முன்னுதாரணமானதும் சிறந்த சாதனையும் ஆகும் என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அம்பாறையில் அட்டாளைச்சேனை பிரதேசத்தை சேர்ந்த ஷாஹிர் ஹான் பாரூக் எனும் சுதந்திர ஊடகவியலாளருக்கு அக்கரைப்பற்று பொலிஸாரால் அச்சுறுத்தல் விடுத்ததாக குற்றம் சுமத்தியுள்ளார்.
அமைச்சர் டளஸ் அழகப்பெரும சம்பந்தமாக தற்போது அரசியல் வட்டாரத்தில் பல்வேறு கதைகள் பரவி வருவதாக தெரியவருகிறது. அமைச்சர் டளஸ் அழகப்பெரும (Dalas Alahapperuma ) பெரும் ஏமாற்றத்துடன் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
அரசாங்கம் யுகதனவி உடன்படிக்கையை அடிப்படையாக கொண்டு கூட்டு பொறுப்பை மீறியதாக பேசுவதை விட அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய பொறுப்புறுதியை மீறியமை சம்பந்தமாக தேடி ஆராய வேண்டும் என ராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க (Vidura Wickramanayaka) தெரிவித்துள்ளார்.
இப்போதுதான் தொழிற்சங்க ஆட்டம் வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இனி போக, போக என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பாருங்கள். அக்கரபத்தனை பிளான்டேசனால் வழங்கப்பட்டுள்ள உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் எமது தொழிற்சங்க நடவடிக்கையும் கடுமையாகவே அமையும் .” – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.