அரசாங்கம் உறுதியளித்த குத்தகை சலுகைகள் குறித்து குத்தகை நிறுவனங்களுக்கு முறையாக அறிவிக்கப்படவில்லை சுனில் ஜெயவர்தனவின் கொலை நாடு முழுவதும் வன்முறை அதிகரித்துள்ளது என்பதைக் குறிக்கிறது என்று சமகி ஜன பல வேகயவின் தலைவர் சஜித் பிரேமதாச கூறுகிறார்.

இன்று கொலை, கொள்ளைகள்  தாக்குதல்கள் தொடர்ந்து இடம் பெறுவதாக  அவர் கூறுகிறார்.

வன்முறையால் கொல்லப்பட்ட லங்கா சுயதொழில் வல்லுநர்களின் தேசிய முச்சக்கர வண்டி சங்கத்தின் தலைவர் சுனில் ஜெயவர்தனவின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக சமகி ஜன பல வேகயவின் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று சுனிலின் இல்லத்திற்கு விஜயம் செய்தார்.

சுனில் கொலைக்கு ஜனாதிபதி பொறுப்பு கூறவேண்டும்  - ஹரின்

இதற்கிடையில், சமகி ஜன பல வேகய கட்சி தலைமையகத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாந்து, தேசிய முச்சக்கர வண்டி சங்கத் தலைவர் சுனில் ஜெயவர்தன படுகொலைக்கு ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ பொறுப்பு கூற வேண்டும் என்று கூறியுள்ளார்.

குத்தகை தவணைகளை செலுத்துவது குறித்து ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட கருத்து காரணமாக சுனில் ஜெயவர்தன அந்த விடயங்களை சுட்டிக் காட்டினார்.

இந்த செயலுக்கு நாடு முழுவதும் உள்ள முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி