தந்தையின் கொலைக்கு நீதி கோரி ஐ.நாவை அணுகியுள்ளார் லசந்தவின் மகள்!
இலங்கையில் 12 ஆண்டுகளுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட மூத்த பத்திரிகையாளர் லசந்த விக்ரமதுங்க மகள் தனது தந்தையின் கொலைக்கு ஐ நா அமைப்பிடம் நீதி கோரி கோரியுள்ளார்.`சண்டே லீடர்’ பத்திரிகையின் ஆசிரியராக இருந்த லசந்த கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி காலை பணிக்குச் செல்லும் போது இராணுவத்துடன் தொடர்புடைய கூலிப் படைகள் என்று குற்றஞ்சாட்டப்படுபவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.