ருமேனியாவில் ராணுவ ஆயுத தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவளிப்பதா, இல்லையா என்பது குறித்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தமது கட்சியின் கூட்டத்தை நடத்தி தீர்மானிக்க உள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாத் பதியூதீன் (Rishad Bathiudeen) தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும் டொலர் தட்டுப்பாட்டு பிரச்சினையில் இருந்து மீள, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் தம்மால் முடிந்தளவில் டொலர்களை தாய் நாட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கோரிக்கை விடுப்பதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardena) தெரிவித்துள்ளார்.

மறைந்த அமைச்சர் மங்கள சமரவீரவின் இருதி அஞ்சலி நிகழ்வை அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர்.

எரிவாயு விலையேற்றம், தட்டுப்பாடு மற்றும் மண்ணென்ணய் தட்டுப்பாடு காரணமாக யாழில் விறகுகளுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது.

அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தொடர்பில் மட்டக்களப்பு மக்களும் அதிகாரிகளும் இறுதி முடிவெடுக்க வேண்டிய நிலையேற்படும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் பத்மநாபா மன்றத்தின் தலைவருமான இரா.துரைரெட்னம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நுவரெலியாவில் உற்பத்தி செய்யப்படுகின்ற மரக்கறி வகைகளுக்கான விலைகள் ஏற்றம் கண்டுள்ள இந்த நிலையில் விவசாயிகள் தங்களது மரக்கறி உற்பத்தியில் பெரும் பாதிப்பினை எதிர் கொண்டு வருகின்றனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 47 பேருக்கு மாவீரர் நாள்  நிகழ்வுகளை மேற்கொள்ள முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம், நேற்று (17) தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

அரசாங்கத்துடன் எமக்கு முரண்பாடுகள் உள்ளன, ஆனால் அதற்காக மக்களை நெருக்கடிக்குள் தள்ள நாம் தயாரில்லை, அரசாங்கத்தை பாதாளத்தில் தள்ளாது மீட்டெடுக்கவே முயற்சிக்கின்றோம் என அமைச்சர் விமல் வீரவன்ச சபையில் தெரிவித்தார்.

அர்மீனியா மற்றும் அசர்பைஜான் இடையே நீண்டகாலமாக மோதல் நிலவி வருகிறது.அசர்பைஜான் மற்றும் அதன் அண்டை நாடான அர்மீனியா இடையே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் போர் நடைபெற்றது. 6 வாரங்கள் நடைபெற்ற இந்த போரில் அர்மீனியாவின் கட்டுப்பாட்டில் இருந்த நாக்ரோனா-கராபாக் மாகாணத்தை அசர்பைஜான் கைப்பற்றியது.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனுக்கு(Mano Ganeshan) கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

"பௌத்தர்கள் இல்லாத இடத்தில் விஹாரை அமைக்கப்படவுள்ளது. அப்படியென்றால், பெரும்பான்மையினக் குடியேற்றம் நடைபெற வாய்ப்புள்ளது" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

வங்கி நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரச வங்கி ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் நிதி அமைச்சு காலதாமதம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கிளிநொச்சி நகரில் உள்ள தனியார் காணியை பலவந்தமாக அபகரிக்க முயற்சிசெய்த அரசாங்க அதிகாரிகாரிகளை பிரதேசவாசிகள் ஒன்று கூடி வெளியேற்றினர்.

சபிக்கப்பட்ட அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் சக்தி என்ற பெயரில் சமகி ஜன பலவேகய ஏற்பாடு செய்திருந்த போராட்டம் இன்று (16) கொழும்பில் இடம்பெற்றது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி