இலங்கை எதிர்கொண்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டுவரும் நோக்கில் சர்வதேச நாணய நிதியத்திடம் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்திடம் ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதில் ஆளும் சட்சியில் இருவேறு நிலைப்பாடுகள் நிலவிவந்த நிலையில் தற்போது அதற்கான இணக்கப்பாடு ஏற்பட்டப்பட்டுள்ளது.

நாட்டில் எரிபொருள், உணவு மற்றும் மருந்துகள் உள்ளிட்ட முக்கியமான இறக்குமதிகளுக்கு பணம் செலுத்த முடியாமல் அரசாங்கம் திணறிய போதும் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடவில்லை.

தற்போது நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு 2.31 பில்லியன் டொலராக இருப்பதால் இலங்கை திவாலடையும் அபாயத்தில் இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

 சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்குமிடையிலான நேற்று இடம்பெற்ற சந்திப்பின் பின்னரே இந்த இணக்கப்பாடு ஏற்பட்டப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தற்போது நாட்டில் டொலர் நெருக்கடி உச்சம் கண்டுள்ள நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியைப் பெற அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளமை தலைக்கு மேல் வெள்ளம் வந்தபின் மேற்கொள்ளும் நடவடிக்கையாகவே தோன்றுகின்றது.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி