வங்கிகளில் தங்க நகைகளை அடகு வைத்துள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நாட்டில் சமீப காலமாக நிலவிவரும் கடுமையான பொருளாதார நெருக்கடியானது பொருளாதாரத்தின் அனைத்து துறைகளையும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதித்துள்ளது, 
 
இதன் விளைவாக தங்கத்தை அடமானம் வைப்பது வேகமாக அதிகரித்துள்ளதாக அரசாங்கம் கூறுகிறது.
 
2019 ஆம் ஆண்டில் சுமார் 210 பில்லியன் ரூபாவாக இருந்த அடமான முற்பணங்களின் நிலுவைத் தொகை, மார்ச் 2024 க்குள் 172 சத வீதமாக அதிகரித்து 571 பில்லியன் ரூபாயாக உயர்ந்துள்ளது என்றும் அரசாங்கம் கூறுகிறது.
 
இந்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, அடமான முற்பணத்தைப் பெற்ற குறைந்த வருமானம் கொண்ட நபர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டியதன் அவசியத்தை உரிமம் பெற்ற வங்கிகள் அங்கீகரித்துள்ளன.
 
அதன்படி, 2024 ஜூன் 30 அல்லது அதற்கு முன் உரிமம் பெற்ற வங்கிகளில் இருந்து தனிநபர் அடிப்படையில் வாடிக்கையாளர்கள் 100,000 ரூபாவுக்கு அடமான முன்பணம் பெற்றிருந்தால் ஆண்டுக்கு அதிகபட்சமாக 10 சத வீதக்கு உட்பட்டு, பொருத்தமான திட்டத்தை செயற்படுத்துவதற்கான வட்டி மானியம் வழங்கப்படவுள்ளது.
 

தமிழ் தேசிய கட்சிகளுக்கும் தமிழ் மக்கள் பொதுச் சபைக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்  கைச்சாத்திடப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் பொதுச் சபையின் செயற்பாட்டாளர் பேராசிரியர் கே.ரி. கணேசலிங்கம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் தமிழ் தேசிய கட்சிகள் சார்பில் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளருமான சி.வி.விக்னேஸ்வரன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை இயக்கம் சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன், ஜனநாயக போராளிகள் கட்சிகள் சார்பில் அதன் தலைவர் வேந்தன், பசுமை தேசிய இயக்கம் சார்பில் அதன் தலைவர் ஐங்கரநேசன், தமிழ் தேசிய கட்சி சார்பில் அதன் பொதுச்செயலாளர் ஸ்ரீகாந்தா. புளொட் சார்பில் அதன் தலைவர் சித்தார்த்தன், ரெலோ சார்பில் அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் கையொப்பமிடப்பட்டனர்.
 
தமிழ் மக்கள் பொதுச் சபை சார்பில் பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம், அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான சி.ஆ.யோதிலிங்கம். அரசியல் விமர்சகர் நிலாந்தன், வசந்தராசா, ஆய்வாளர் யசீந்திரா உட்பட பலரும் கையொப்பமிட்டுள்ளனர்.
 


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி