சுற்றுலா விசாவில் வந்த இஸ்ரேலியர்கள், அறுகம்பை பகுதியில் சுற்றுலா தொழிற்துறையை கடுமையாகப் பாதித்து வருவதாக, அந்த பகுதியில் சுற்றுலா

தொழிற்துறையில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்கள் கூறுகின்றனர்.

சுற்றுலா விசாவில் வந்து நாட்டில் வணிகம் செய்த பல வெளிநாட்டினர் மீது ஏற்கனவே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் புத்திக ஹேவாவசம் கூறுகிறார்.

இஸ்ரேலியர்கள் இந்தப் பகுதியில் சுற்றுலாத் துறையில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து சர்வதேச DJ ஒருவர் சமூக ஊடகங்களில் தனது கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.

இந்த நாட்டிற்கு வருகை தந்த சர்வதேச DJ டொம் மோங்கல் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

அறுகம்பை பகுதிக்குச் சென்றபோது, இஸ்ரேலிய தலைநகர் டெல் அவிவ் சென்றது போன்ற அனுபவம் தனக்கு ஏற்பட்டதாக அவர் கூறுகிறார்.

அறுகம்பை பகுதி முழுவதும் இஸ்ரேலியர்கள் தங்கள் ஆட்சியைப் பரப்பியுள்ளதாக அவர் கருதுவதாகக் கூறியுள்ளார்.

அறுகம்பை நாட்டின் ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாகும்.

இதற்கு முக்கிய காரணம், அறுகம்பை கடல் பகுதி சர்ஃபிங்கிற்கு ஏற்றதாக உள்ளது.

இவ்வாறு நாட்டுக்கு வருகை தரும் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் இஸ்ரேலியர்கள் ஆகும்.

ஏனென்றால், பெரும்பாலான சுற்றுலாப் பொருட்கள் இஸ்ரேலியர்களால் வழங்கப்படுகின்றன.

அத தெரண நடத்திய விசாரணையில், சுற்றுலா விசாவில் வரும் இஸ்ரேலியர்கள் வணிகத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

இது உள்ளூர் வர்த்தகர்களை கடுமையாக பாதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி