சுங்கத் திணைக்களத்தால் சந்தைக்கு விடப்பட்ட 7200 பொருட்களில் 5800 பொருட்கள் எந்தவொரு பரிசோதனைக்கும் உட்படுத்தப்படவில்லை என கூட்டுறவு சேவைகள் சந்தைப்படுத்தல் மேம்பாடு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண நேற்று (6) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.  

இதற்கிடையில் இவை கொள்வனவு செய்யும் பொருட்களா அல்லது கொள்வனவு செய்ய முடியாத தரமற்ற பொருட்களா  என்று தெரியவில்லை என இராஜாங்க அமைச்சர் கூறினார்.

சரக்கு கொள்கலன்களில் இலங்கைக்கு கொண்டு வரப்படும் பொருட்கள் நேரடியாக சந்தைக்கு அனுப்பப்படுவதாகவும் இலங்கை சுதந்திரமடைந்தத காலம் தொடக்கம் இந்த நிலைமைதான் இருந்து வருவதாகவும் அதை மாற்றியமைக்க நடவடிக் கை எடுக்கப்படும் எனவும்  இராஜாங்க அமைச்சர் அழகியவண்ண தெரிவித்தார்.

எந்தவொரு அரசாங்கமும் வேண்டுமென்றே மக்களைத் துன்புறுத்த முயற்சிக்காது என்றும் நச்சு தேங்காய் எண்ணெய் சந்தையில் வெளியிடப்பட்டதாக எந்தவொரு அரசு நிறுவனமும் இதுவரை கூறவில்லை என்றும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி