டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளைப் பார்ப்பதற்காக விளையாட்டு அமைச்சருடன் மூன்று இராஜாங்க அமைச்சர்கள், அனுசரணையாளர்களிடம் இருந்து பெற்ற நிதியைக்கொண்டே ஜப்பானுக்குச் சென்றுள்ளனர் என்றும் அரச நிதியிலிருந்து அல்ல என்றும் அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக மற்றும் தகவல் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

இந்த விஜயத்தின் காரணமாக அரசுக்கோ அல்லது நிதி அமைச்சுக்கோ பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்விடயத்தைத் தெரிவித்தார்.

ஐப்பானின் டோக்கியோ நகரில் இடம்பெறும் ஒலிம்பிக் போட்டிகளைக் காண்பதற்காக கடந்த 21ஆம் திகதியன்று இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மற்றும் குழுவினர் புறப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி