நாட்டில் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், ஒரு கிலோகிராம் கல் உப்பின் விலை 450 முதல் 500 ரூபாய்
வரை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
உப்பு இறக்குமதி தாமதமாகியுள்ளதால், சந்தையில் உப்புக்கு தட்டப்பாடு ஏற்பட்டுள்ளதாக, உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
30 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ள போதிலும், இதுவரையில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் தாமதிக்கப்பட்டு வருவதாக, அச்சங்கத்தின் தலைவர் கனக அமரசிங்க தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், எதிர்வரும் வாரங்களில் நாட்டுக்கு உப்பு கொண்டுவரப்படும் என்றும் அப்போது இந்தத் தட்டுப்பாடு நீங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறானதொரு நிலையில், சந்தையில் உப்பின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபைக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ள நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் அசேல பண்டார, இது தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் கூறியுள்ளார்.