பாடசாலைகளில் தரம் பத்து மற்றும் பதினொன்றுகளில் படிக்கும் மாணவிகள் தலசீமியா நோயால்
பாதிக்கப்பட்டுள்ளார்களா என்பதை ஆராய, நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளில் ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த குழந்தைகளுக்கான பரிசோதனையின் போது மூன்று அட்டைகள் வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவின் பணிப்பாளர் சிறப்பு மருத்துவர் சமிந்தி சமரக்கோன் தெரிவித்தார்.
அதன்படி, சம்பந்தப்பட்ட சிறுமிகளுக்கு கிரீன் கார்ட் வழங்கப்பட்டிருந்தால், அச்சிறுமி நோய்க்கு இலக்காகவில்லை என்பது உறுதிப்படுத்தப்படுகிறது.
சுகாதார அதிகாரிகளால் மஞ்சள் அட்டை வழங்கப்பட்டிருந்தால், அது சிறுமிக்கு தொற்று நோய் இருக்கலாம் என்பதற்கான எச்சரிக்கையாகும்.
இளஞ்சிவப்பு அட்டை வழங்கப்பட்டிருந்தால், சிறுமிக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று அர்த்தப்படும் என்று, சிறப்பு மருத்துவர் சமிந்தி சமரக்கோன் தெரிவித்தார்.
அத்தகைய சிறுமிகள் மீது கவனம் செலுத்தப்பட்டு, தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இதற்காக வைத்தியசாலைக் கட்டமைப்பு அதிக பணத்தைச் செலவிடுகிறது, முக்கியமாக, இரத்தமாற்றம் மற்றும் இரத்தத்திலிருந்து இரும்புச்சத்தை அகற்றுதல் போன்றன முன்னெடுக்கப்படுவதாக, விசேட மருத்துவர் சமிந்தி சமரக்கோன் கூறினார்.
இந்த நாட்டில் சுமார் 2,500 குழந்தைகள் தலசீமியா என்ற பயங்கர நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சுமார் ஐந்து இலட்சம் பேர் இந்த நோயின் தாக்கத்துக்கு இலக்காகியுள்ளனர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த நாட்டில் ஒவ்வொரு ஆண்டும், நாற்பது முதல் ஐம்பது வரை தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பிறப்பதாக சுகாதார அமைச்சு கூறுகிறது.