சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு!
இலங்கைக்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ, சற்று முன்னர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைத்தினூடாக நாட்டை வந்தடைந்தார்.
இலங்கைக்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ, சற்று முன்னர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைத்தினூடாக நாட்டை வந்தடைந்தார்.
ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கு பல அச்சுறுத்தல் இருக்கும் காலப்பகுதியில் தான் நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிகம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
அரச பயங்கரவாதத்தையும் இனவாதத்தையும் பயன்படுத்தி சிறுபான்மையினரை ஒடுக்கும் இந்திய பிரதமரிடமிருந்து ஒடுக்கப்பட்ட தமிழ் பேசும் மக்கள் நீதியைப் பெறக் கூடாது என கிழக்கு முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.
பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து தொழிலாளர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டதை எதிர்த்து பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிற்சங்கத் தலைவர் ஒருவரை மீண்டும் பணியில் அமர்த்த முடியாது என பிரபல பல்தேசிய நிறுவனம் ஒன்று தொழில் ஆணையரிடம் தெரிவித்துள்ளது.
மெக்சிகோவின் நகர் பகுதியில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு இடையே நடந்த மோதலில் 10 பேர் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர்.
புலனாய்வுப் பிரிவினர் ஜனாதிபதியிடம் சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து தம்மை நீக்கியதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜானக திசக்குட்டி ஆராய்ச்சி தெரிவித்த கருத்து தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் இந்த அறிக்கை மிகவும் தீவிரமானது எனவும் முன்னாள் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
திருகோணமலை பெரியகுளம் பகுதியில் விகாரை ஒன்றினை அமைப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து குறித்த பகுதி மக்களால் இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.குறித்த போராட்டத்தில் பொதுமக்களோடு இணைந்து நாடாளுமன்ற உருப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
அரசாங்கத்திற்குள் சிங்கம் போல் இருந்த சிலர் நாய் குட்டிகளின் நிலைமைக்குச் சென்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.
நாட்டில் எதிர்வரும் 18-01-2022 ஆம் திகதி நாடாளுமன்றத்தின் புதிய அமர்வு ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதியின் முக்கிய உரை மீதான ஒத்திவைப்பு வேளையில் விவாதம் நடத்தப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவியை ரெஜினோல்ட் குரே இராஜினாமா செய்துள்ளார்.
பூடானின் திம்பு நகரில் இருந்து 68 கிலோ மீட்டர் தென்மேற்கே இன்று இரவு 8.16 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
இந்திய பிரதமருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ள ஆவணத்தில் பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்டுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
முடிந்தால் மாகாண சபை தேர்தலை நடத்துமாறு, அரசாங்கத்துக்கு சவால் விடுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார இன்று (06) கொழும்பில் தெரிவித்துள்ளார்.
வட, கிழக்கு இணைக்கப்பட்டு ஒரு தமிழ்த் தேசத்தை அங்கிகரிக்கும் முகமாக இந்தியா தனது அரசியல் நடவடிக்கையை எடுக்கவேண்டும். இல்லை என்றால் புரட்சி வெடிக்கும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தெரிவித்தார்.
அரசு தவறான வழியில் பயணிக்குமானால் அதற்கான ஆதரவை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒருபோதும் வழங்காது.இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரான இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.