தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி விடுதலைப் பொங்கல் நிகழ்வு இன்றையதினம் யாழ்ப்பாணம் முற்றவெளியில் இடம்பெற்றுள்ளது.

"இந்த அரசை பதவி விலகுமாறு நாட்டு மக்கள் வலியுறுத்த ஆரம்பித்துவிட்டனர். எனவே, பதவிக் காலத்தை நீடிப்பதற்கு சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவது பற்றி கதைப்பதில் பயன் இல்லை. எனவே, கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே தேர்தல் நடத்தப்பட வேண்டும்.”

திருகோணமலை - சீனக்குடா எண்ணெய் குதங்கள் இந்தியாவிற்கு விற்பனை செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருகோணமலையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களுக்கு அரசாங்கம் நிவாரணம் வழங்க வேண்டுமென பெண்கள் அமைப்பு ஒன்று கோரிக்கை விடுத்துள்ளது.

முன்பதிவு செய்யப்பட்ட ரயில் சேவைகளை முன்னறிவிப்பின்றி இரத்து செய்வதால் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுவதாக ரயில்வே திணைக்களம் மீது அதன் ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தமிழ் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் சேர்ந்தால் மற்றும் எமது தமிழ்த் தேசியக் கட்சிகள் பொது நிகழ்ச்சிநிரல் ஒன்றில் சேர்ந்தால் தேசியக் கட்சிகளும் ஜே.வி.பி யும் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும் என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாநகர சபையின் ஏற்பாட்டில் முதன்முறையாக முத்தமிழ் விழா எதிர்வரும் 16ஆம் திகதி காலை 8.30 மணி முதல் நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் இடம்பெறவுள்ளதாக யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு - கூழாவடி பகுதியில் உள்ள புகையிரதக் கடவை கடந்த சில வாரங்களாக திறந்த வண்ணமே காணப்படுவதால் பல விபத்துக்கள் மற்றும் மக்களின் உயிர் போகும் நிலையில் காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு இன்று காலை சென்ற தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி, தனது சாட்சியம் வாக்குமூலம், தமிழில் இருந்து சிங்கள மொழிக்கும், சிங்களத்தில் இருந்து தமிழ் மொழிக்கும் உரை பெயர்ப்பு செய்யப்பட்டாலும், இறுதியில் தான் கையெழுத்திடுவதாயின், அந்த ஆவணம் தமிழ் மொழியில் எழுதப்பட்டிருக்க வேண்டும் திட்டவட்டமாக ஆணைக்குழு விசாரணையாளர்களுக்கு அறிவித்ததால், விசாரணை இடை நடுவில் நிறுத்தப்பட்டு, பிறிதொரு உசிதமான தினத்தில் நடத்த முடிவாகியது.

உலகம் முழுவதும் அதிவேகமாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது.  இதுவரை 30 கோடிக்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த 05 தமிழ் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.சட்டமா அதிபரின் ஆலோசனையின்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.


ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்லி சம்பிக்க ரணவக்கவின் விரிவான மருத்துவ பரிசோதனை அறிக்கையை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதான நீதிமன்ற மருத்துவ அதிகாரிக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை அரசியலில் ஆட்சியை உருவாக்கக்கூடிய பெரும் புள்ளியாகக் கருதப்பட்ட முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு அனுதாபம் தெரிவிக்கும் பிரேரணைமீதான விவாதம் எதிர்வரும் 21 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒரு கிலோகிராம் அரிசியின் விலை 200 ரூபாவை அண்மித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள எரிவாயு தட்டுப்பாடு நிலையில், அதனை பெறுவதற்கு நாளாந்தம் மக்கள் நீண்ட வரிசையில் கால் வலிக்க காத்து கிடக்கின்றனர்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி