இனவாதமே இந்நாட்டின் பொருளாதார வீழ்சிக்கு காரணமாகும் என்று மலையக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினருமான ஆர். இராஜாராம் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி வீடு ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் 17 வயதான மகளும் தாயாரும் உடல் கருகி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தைஏற்படுத்தியுள்ளது.

தமது மகளை கடத்தி சென்று பாலியல் வன்புணர்வு செய்தவரை நீதிமன்ற வளாகத்தில் வைத்து சுட்டுக்கொலை செய்த தந்தை தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.

பேச்சுவார்த்தைகள் ஊடாக மக்களின் கனிசமான பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்க முடியும் எனவும் அதன் காரணமாக ஜனாதிபதி விடுத்துள்ள பேச்சுவார்த்தைக்கான அழைப்பினை நம்பிக்கைகொண்டு தமிழ் தலைமைகள் பேசுவதற்கான சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் பத்மநாபா மன்றத்தின் தலைவருமான இரா.துரைரெட்னம் தெரிவித்துள்ளார்.

கொவிட் காரணமாக இழந்த இரண்டு வருடங்களை ஜனாதிபதிக்கு மீண்டும் வழங்க தீர்மானம் கொண்டு வர வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகே நேற்று (21) தெரிவித்தார்.

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பாக பகிரங்க விவாதத்திற்கு வருமாறு கமத்தொழில் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே விடுத்த சவாலை, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ (Harin Fernando) ஏற்றுக்கொண்டுள்ளார்.

குத்துச்சண்டை  போட்டியில்  தங்கப்பதக்கம் வென்ற  கணேஸ் இந்துகாதேவிக்கு  வவுனியாவிலும்  மாங்குளத்தில் அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இஸ்லாம் பாடநூல்களை மீளப் பெற்றுக்கொள்ளுமாறு கல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் அக்கிராசன உரை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதத்திற்கு சமகி ஜன பலவேகய தவிர்ந்த ஏனைய அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் ஒதுக்கப்பட்ட நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம் சட்டத்தரணிக்கு பிணை வழங்க சட்டமா அதிபர் தீர்மானித்துள்ளார்.

இந்தோனேசிய நாட்டின் தலைநகராக ஜகார்த்தா இருந்து வருகிறது. இந்த நிலையில் தலைநகரை அங்கிருந்து நுசந்தாராவுக்கு மாற்றுவதற்கான சட்டத்தை அந்த நாட்டின் நாடாளுமன்றம் இயற்றியது.

நாளுக்கு நாள் கேட்பவர்களிடமிருந்து விலகிச் செல்லும் அரச வானொலி, தனது வளங்களை வேறு முதலீடுகளுக்குப் பயன்படுத்த தீர்மானித்துள்ளது.

இந்தியாவின் திருப்பதி வெங்கடேஸ்வரர் கோவிலின் பக்தரான பிரதமர் மஹிந்த ராஜபக்விடம் இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க பஞ்ச மகா ஈஸ்வரங்களை புனித ஸ்தலங்களாக பெயரிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

” 2009 இல் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதும் – சமாதானம் மலர்ந்துவிட்டதாக ஜனாதிபதி கூறினார். ஆம். போர் முடிந்துவிட்டது உண்மைதான். ஆனால் சமாதானம் பிறக்கவில்லை. அதேபோல போர் ஏற்பட்ட காரணமாக அமைந்த பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படவில்லை. இந்நாட்டில் நிலையான சமாதானமும், பொருளாதார வளர்ச்சியும் ஏற்பட வேண்டுமெனில் தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கு கௌரவமானதொரு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்.”

பாகிஸ்தானில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கத்தினை சுவீகரித்த முல்லைத்தீவு யுவதியான கணேஷ் இந்துகாதேவிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி