சுகாதார அமைச்சுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி நிறைவடைந்துள்ளதாக சுகாதார ஊழியர்களின் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் எதிர்வரும் மாதங்களில் மருந்து தட்டுப்பாடு தீவிரமடையும் என எதிர்தரப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டு அடிப்படையற்றவை.

புஷ்பிகா டி சில்வாவிடமுள்ள திருமதி இலங்கை அழகி (Mrs Sri Lanka) பட்டத்தை உடன் நடைமுறைக்கு வரும் வகையில் ரத்து செய்வதற்கு திருமதி இலங்கை அழகி ஏற்பாட்டு குழு பணிப்பாளர் சந்திமால் ஜயசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

ராகம மருத்துவ பீடத்திற்குள் அத்துமீறி நுழைந்து அங்குள்ள மருத்துவ மாணவர்களை தாக்கிய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவின் மகன் உட்பட 9 சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மற்றும் வேறு இனத்தை செந்தவர்களை அழைத்து பள்ளிவாசலில் வழிபாடுகளை நடத்தியதற்கு எதிராக முஸ்லிம்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இன்று பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடுவதற்கு பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் அனுமதி கோரியுள்ளார்.

கட்டாய தடுப்பூசி முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்லாயிரக்கணக்கான மக்கள் நடத்தி வரும் போராட்டத்தால் கனடா நாட்டின் தலைநகர் ஒட்டாவா நகரம் நிலை குலைந்து போய் உள்ளது.

அரசாங்க செலவினங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை கடுமையாக நடைமுறைப்படுத்த நிதியமைச்சு தீர்மானித்துள்ளது.

பௌத்தம் மற்றும் பௌத்த மரபு குறித்த சர்வதேச வினாவிடை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில் வழங்கல்

நாடளாவிய ரீதியில் கொடிய தொற்றுநோய் பரவிக்கொண்டிருந்த வேளையில், மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) ஒரு வருடத்திற்கு பின்னர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதிக்கு தேவையான அத்தியாவசிய உணவு பொருட்கள் உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்வதற்காக இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் கடன் உதவிகளை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இனவழிப்பு, மனித குலத்திற்கு எதிரான குற்றம் மற்றும் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட போர்க் குற்றவாளிகளுக்கு எதிரான பிரச்சாரமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

டிக்டாக் யூடியூப் போன்றவற்றின் வளர்ச்சியால் ஃபேஸ்புக்கின் வருமானம் குறைந்துள்ளதை தொடர்ந்து, மார்க் சக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பும் குறைந்துள்ளதாக அமெரிக்காவின் வர்த்தகப் பத்திரிகையான போர்ப்ஸ் வெளியிட்ட அறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது.

பொய்யான தகவல்களை வழங்கி, கிழக்கு மாகாணத்தில் தமிழ் ஊடகவியலாளர் ஒருவருக்கு எதிராக நீதிமன்றத்தில் தடையுத்தரவைப் பெற பொலிசார் முயற்சித்துள்ளனர்.

ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ள தொழிலாளர்களின் வேலைநிறுத்த உரிமையை சட்டரீதியாக இல்லாதொழிக்க வேண்டும் என நீதியமைச்சர் தெரிவித்த எதேச்சாதிகாரக் கூற்றைக் கண்டித்துள்ள, தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கத் தலைமை, மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டுமென நீதி அமைச்சரை வலியுறுத்தியுள்ளது


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி